Search This Blog
Friday, January 17, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இந்த கருத்துகள் அனைத்தும் நமது பாடப் புத்தக வினாக்கள் பகுப்பாய்வு , அரசு பொதுத் தேர்வு வினாத்தாள் ( மார்ச் 2019 & ஜீன் 2019 ) அடிப்படையில் தயாரிக்கப்பட்டது .
- மாணவர்களை தேர்ச்சி பெற வைக்க நாம் முக்கியமான கேள்விகளை படிக்க வைத்து அதிலிருந்து வினாத்தாளில் கேள்விகள் கேட்கப் படவில்லை என்று கவலைப் படுவதை விட சில குறிப்பிட்ட அலகுகளை நாம் தெளிவாக படிக்க வைத்தால் வெற்றி உறுதி முதலில் பாடப் புத்தக ( BOOK BACK ) 1 மதிப்பெண் வினாக்கள் 176 - யை படிக்க வைத்து தயார் செய்யப்பட வேண்டும் . இதிலிருந்து குறைந்த பட்சம் 10 முதல் 13 கேள்விகள் இடம் பெறும் . ஆகவே இதில் குறைந்த பட்சம் 10 மதிப்பெண் உறுதி
அடுத்ததாக 2 மதிப்பெண் , 3 மதிப்பெண் , மற்றும் 5 மதிப்பெண் வினாக்களை படிக்க வைக்க சில முக்கியமான அலகுகளான , அலகு 1 , 4 , 7 மற்றும் 10 தேர்வு செய்து அதை திரும்ப திரும்ப படிக்க வைக்க வேண்டும் . நாம் இந்த அலகுகளை தேர்ந்தெடுக்க காரணம் குறைந்த கேள்விகள் உள்ள அலகு மற்றும் படிப்பதற்கு எளிமையான அலகு என்பதே . தேர்ந்தெடுக்கப்பட்ட 4 அலகுகளிலிருந்து , 2 மதிப்பெண் வினாக்கள் 2 முதல் 3 வினாக்களும் , 3 மதிப்பெண் வினாக்கள் 3 முதல் 6 வினாக்களும் , 5 மதிப்பெண் வினாக்கள் 3 முதல் 4 வினாக்களும் , 11ம் வகுப்பு அரசு பொதுத் தேர்வு மார்ச் 2019 & ஜீலை 2019 வினாத்தாளில் கேட்கப்பட்டுள்ளது .
இந்த பகுப்பாய்வின் அடிப்படையில் 2 மதிப்பெண் வினாக்கள் குறைந்தது இரண்டும் , 3 மதிப்பெண் வினாக்கள் குறைந்தது மூன்றும் , 5 மதிப்பெண் வினாக்கள் குறைந்தது மூன்றும் கேட்கப்பட்டுள்ளது . ஆகவே குறைந்த பட்சம் 30 முதல் 45 மதிப்பெண் இடம் பெற்றுள்ளது . ஆகவே நாம் தேர்ந்தெடுத்த 4 அலகுகளில் குறைந்தபட்சம் 30 மதிப்பெண் உறுதி .
இதன் மூலம் 1 மதிப்பெண் வினாக்களிலிருந்து 10 மதிப்பெண்களும் , மற்ற 2 , 3 , 5 மதிப்பெண் வினாக்களிலிருந்து 30 மதிப்பெண்களும் கண்டிப்பாக கிடைக்கும் . ஆகவே நமக்கு குறைந்த பட்சம் 40 மதிப்பெண் கிடைப்பது உறுதி . நாம் எடுத்து கொண்ட கணக்கிற்கு மேல் கண்டிப்பாக வினாத்தாள் அமையுமே தவிர 40 மதிப்பெண்களுக்கு குறைய வாய்ப்பில்லை .
நாம் எடுத்துக் கொண்ட கணக்குகள் பகுப்பாய்வை விட குறைவே . ஆகவே மேற்கூறிய அலகுகளை திட்டமிட்டு படித்தால் வெற்றி நிச்சயம் .
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
11th Commerce Slow Learners High Score Instructions!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.