திருக்குறள்
திருக்குறள் - 361
அதிகாரம் : அவா அறுத்தல்
அவாஎன்ப எல்லா உயிர்க்கும் எஞ்ஞான்றும்
தவாஅப் பிறப்பீனும் வித்து.
பொருள் : எல்லா உயிர்களுக்கும் எக்காலத்திலும் ஒழியாமல் வருகின்ற பிறவித்துன்பத்தை உண்டாக்கும் வித்து அவா என்றுக் கூறுவர்.
பழமொழி
"The future crop is known in the germ.
விளையும் பயிர் முளையிலேயே தெரியும்
இரண்டொழுக்க பண்புகள்
1. நான் விதைப்பதை தான் அறுப்பேன் .
2. எனவே என் உள்ளத்தில் அன்பு, இரக்கம், கீழ்படிதல் போன்ற நல்ல விதைகளை விதைப்பேன்.
பொன்மொழி
அறிவு என்றுமே ஒரு செயலின் இருமுனைகளையும் ஆராய்வதாக இருக்க வேண்டும். நன்மை தீமைகள் தெளிதல் வேண்டும் ...
------ஏலி விட்னி
பொது அறிவு
1. முதன்முதலில் வெளிவந்த கார்ட்டூன் படம் இது?
Snow White and seven dwarfs(1937)
2. ஆஸ்கர் விருது பெற்ற ஒரே இந்திய இயக்குனர் யார்?
சத்யஜித் ரே.
English words & meanings
Urbanology – study of urban development of cities.
கிராமங்கள் நகரமயமாதல் குறித்த அறிவியல்.
Unalterable -not able to be changed.
மாற்றமுடியாத
ஆரோக்ய வாழ்வு
அதிக அளவு நீர் குடிக்கும்போது, உடலில் ஆங்காங்கே தேங்கி இருக்கும் நச்சுப் பொருள்கள் அனைத்தும் சிறுநீர் வழியாக வெளியேறி உடலை சுத்தப்படுத்தி விடுவதால் சிறுநீர்ப்பை புற்றுநோய்க்கான வாய்ப்பு குறைகிறது.
Some important abbreviations for students
min - minute.
sec - second
நீதிக்கதை
கொடுத்துப் பெறுதல்
ஒரு புத்த மடாலயத் தலைவர் மிகவும் கவலையில் இருந்தார். ஒரு காலத்தில் அவரது மடாலயம் அந்தப் பகுதியிலேயே சிறப்பும் மதிப்பும் பெற்று விளங்கிய ஆலயம். தற்போது மதிப்புக் குறைந்து பாதாளத்திற்குப் போய்க் கொண்டிருந்தது அவருக்குத் தெளிவாக விளங்கியது. மடத்தின் உள்ளேயே பிக்ஷுக்கள் யாரும் ஒருவரை ஒருவர் மதிக்காமல் தன்னிச்சையாகச் செயல் பட்டுக் கொண்டிருந்தார்கள்.
பொறுக்க இயலாமல் ஒரு நாள் நம் தலைவர் தன்னை விட அனுபவத்தில் சிறந்த ஒரு குருவைத் தேடிப் போனார். தன் பிரச்சினையை எடுத்துச் சொன்னார்.
அந்தக் குருவும் சற்று நேரம் ஆழ்ந்து யோசித்து விட்டு பிறகு "உங்கள் மடத்தில் புத்தரே வந்து தங்கியிருக்கிறார். நீங்கள் எவரும் அவரைக் கண்டு கொள்ளவும் இல்லை. மதிக்கவும் இல்லை. பின் எப்படி சிறப்பு செழிக்கும்?" என்று கேட்டார்.
இதைக் கேட்ட நம் தலைவர் வியப்பு மாறாமலே மடத்திற்குத் திரும்ப வந்து அங்கே இருந்த புத்த பிக்ஷுக்களுக்கு விபரம் சொன்னார். அவர்களுக்கும் ஆச்சரியம். அந்தக் கணத்தில் இருந்து சுற்றியிருப்பவர்களில் ஒருவர் கடவுளாக இருக்கக் கூடும் என்ற அனுமானத்தில் எல்லோரையும் பணிவாகவும், அன்பாகவும், மிகுந்த மரியாதையுடனும் ஒவ்வொருவரும் அணுகினார்கள். நாளடைவில் மடத்தின் சிறப்பு பல மடங்கு உயர்ந்து போனது என்பதைச் சொல்லத் தேவையே இல்லை!
நீதி : கூடிச் செயல் படும் போது கொடுத்துப் பெறுதல் அவசியமான ஒரு சூட்சுமம் ஆகும்
இன்றைய செய்திகள்
22.01.20
*தூத்துக்குடியில் ரூ.40,000 கோடி செலவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
* நந்தனம், கிண்டி மற்றும் சின்னமலை ஆகிய 4 மெட்ரோ நிலையங்களிலும் நிமிடத்திற்கு ரூ.1 கட்டணத்தில் மின்சார ஸ்கூட்டர் வசதி அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது.
*ஒலியை விட 2.8 மடங்கு வேகத்தில் தாக்கக்கூடிய போர்விமானங்கள் தஞ்சை விமானப்படையில் இணைப்பு.!
* தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் குரூப்-1 தேர்வுக்கு ஜனவரி 20 ந் தேதி முதல் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்.
*ஒருநாள் கிரிக்கெட் பேட்ஸ்மேன்கள் தரவரிசை பட்டியலை ஐசிசி வெளியிட்டுள்ளது. இதில் இந்திய வீரர்களான விராட் கோலி மற்றும் ரோகித் சர்மா முதல் இரண்டு இடங்களை பிடித்துள்ளனர்.
Today's Headlines
🌸The Cabinet has approved the setting up of a crude oil refinery at Thoothukudi at a cost of Rs 40,000 crore.
🌸 Electric scooter facility has been introduced at the four metro stations in Nandanam, Kindi and Chinnamalai at Rs.1 per minute
🌸 Fighter jet warplanes which can hit 2.8 times faster than the sound was Linked In Tanjore air force
🌸 Can apply in online upto January 20 for the Group-1 Examination conducted by the Tamil Nadu Government Employee Board
🌸 ICC has released a list of ODI Cricket Batsmen. Indian players Virat Kohli and Rohit Sharma topped the list.

No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.