👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
இன்ஜினியரிங் மாணவர் சேர்க்கைக்கான, ஒருங்கிணைந்த பொது நுழைவு தேர்வுக்கான விண்ணப்பத்தை, பிப்ரவரி 7 முதல் ஆன்லைனில் பதிவு செய்யலாம் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
தேசிய உயர்கல்வி தொழில்நுட்ப நிறுவனங்களான, ஐ.ஐ.டி., - என்.ஐ.டி., போன்றவற்றில், பி.இ., - பி.டெக்., படிப்புளில் சேர, தேசிய அளவிலான ஒருங்கிணைந்த பொது நுழைவு தேர்வான, ஜே.இ.இ., தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும். இந்த தேர்வு, மத்திய அரசின் தேர்வு நடத்தும் நிறுவனமான, தேசிய தேர்வு முகமையின் வழியாக, ஆண்டுக்கு இரண்டு முறை நடத்தப்படுகிறது. முதல் தேர்வு ஜனவரியில் நடத்தப்பட்டு, ஒரு வாரத்தில் முடிவு வெளியிடப் பட்டது.
இதையடுத்து, ஏப்ரலில் நடக்கும் தேர்வுக்கு, பிப்ரவரி 7ல் விண்ணப்ப பதிவு துவங்கும்; மார்ச், 7 வரை விண்ணப்ப பதிவு மேற்கொள்ளலாம் என, தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இரண்டாம் கட்ட ஜே.இ.இ., தேர்வு, ஏப்ரல் 5, 7, 9, 11ம் தேதிகளில் நடக்கும். முதல் கட்ட தேர்வு எழுதிய மாணவர்கள், விரும்பினால், இந்த தேர்விலும் பங்கேற்கலாம். இரண்டு தேர்வுகளில், எதில் அதிக மதிப்பெண் வருமோ, அதையே மாணவர் சேர்க்கைக்கான கவுன்சிலிங்குக்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும் என, தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.