Breaking

Tuesday, January 21, 2020

போலீஸ் வேலைக்கு பேரம் கொக்கி போடும் கைத்தடிகள்: போலீஸ் அதிகாரிகள் எச்சரிக்கை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
'போலீஸ் வேலை வாங்கித் தருவதாக, அரசியல் கைத்தடிகள் கொக்கி போடுவதால், தேர்வர்கள் உஷாராக இருக்க வேண்டும்' என, போலீஸ் உயர் அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, இரண்டாம் நிலை காவலர்கள் மற்றும் எஸ்.ஐ.,க்கள், சீருடை பணியாளர் தேர்வு குழுமம் வாயிலாக தேர்வு செய்யப்படுகின்றனர்.இரண்டாம் நிலை காவலர்களாக, ஆண்கள், 5,962; பெண்கள் மற்றும் திருநங்கையர், 2,465; சிறைத் துறைக்கு, 22 பெண்கள் உட்பட, 208 பேர்; தீயணைப்பு துறைக்கு, 191 பேர் என, 8,826 பேர் தேர்வு செய்யப்பட உள்ளனர்.இவர்களுக்கு எழுத்து மற்றும் உடல் தகுதி தேர்வுகள் நடத்தப்பட்டுள்ளன. சான்றிதழ்களும் சரிபார்க்கப்பட்டுள்ளன. இன்னும் சில தினங்களில் முடிவு வெளியிடப்படலாம் என, எதிர்பார்க்கப்படுகிறது.அதேபோல, காவல் துறைக்கு, 969 எஸ்.ஐ.,க்களை தேர்வு செய்யவும், எழுத்து தேர்வு முடிந்துள்ளது. இவர்களுக்கு உடல் தகுதி தேர்வு மற்றும் சான்றிதழ்கள் சரிபார்ப்பு நடக்க உள்ளது.இந்நிலையில், மேற்கண்ட தேர்வர்களை குறிவைத்து, அரசியல் கைத்தடிகள் கொக்கி போட்டு, வசூல் வேட்டையில் ஈடுபடும் தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, போலீஸ் உயரதிகாரிகள் கூறியதாவது:அரசியல்வாதிகளின் செல்வாக்கில், போலீஸ் வேலை வாங்கித் தருகிறேன் என, யாராவது ஆசை காட்டினால், நம்ப வேண்டாம். காவல், சிறை மற்றும் தீயணைப்பு துறைகளுக்கு, தகுதி மற்றும் திறமை அடிப்படையிலேயே, ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். போலீஸ் வேலை வாங்கித் தருவதாக, ஆசை காட்டுவோர் பற்றி, உடனடியாக புகார் அளிக்கலாம். சம்பந்தப்பட்டவர்கள் மீது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு, அவர்கள் கூறினர். - நமது நிருபர் -
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog