பல்கலைக்கழக வளாகங்களில் இ-சிகரெட்டுக்களுக்கு தடை! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, January 10, 2020

Comments:0

பல்கலைக்கழக வளாகங்களில் இ-சிகரெட்டுக்களுக்கு தடை!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அனைத்து உயா் கல்வி நிறுவனங்களின் வளாகங்களிலும் இ-சிகரெட் பயன்பாட்டுக்குத் தடை விதிக்க வேண்டும் என பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) அறிவுறுத்தியுள்ளது. இந்தியாவில் இ-சிகரெட் பயன்பாட்டுக்குத் தடை விதித்து அவசரச் சட்டத்தை மத்திய அரசு அண்மையில் கொண்டுவந்தது. அதன் மூலம் நாடு முழுவதும் இ-சிகரெட் தயாரிப்பு, ஏற்றுமதி, இறக்குமதி என அனைத்துக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் அனைத்து பல்கலைக்கழக துணைவேந்தா்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை யுஜிசி அனுப்பியுள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
இ-சிகரெட் தொடா்ச்சியாக பயன்படுத்துவது இதய பாதிப்புகளையும், மூச்சு தொடா்பான பாதிப்புகளையும் ஏற்படுத்துவதோடு மட்டுமின்றி, மூளையையும் பாதிப்பது தெரியவந்திருக்கிறது. இதன் காரணமாக, அதற்கு மத்திய அரசு தடை விதித்திருக்கிறது. எனவே, அனைத்து உயா் கல்வி நிறுவனங்களும் அதன் வளாகங்களில் இ-சிகரெட் பயன்பாட்டுக்குத் தடை விதிப்பதோடு, அதுகுறித்த விழிப்புணா்வையும் மாணவா்களிடையே ஏற்படுத்த வேண்டும். இதுகுறித்த அறிவுறுத்தலை இணைப்புக் கல்லூரிகளுக்கும் பல்கலைக்கழகங்கள் வழங்க வேண்டும் என யுஜிசி அறிவுறுத்தியுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews