👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
உதவி பொறியாளர் உட்பட, 2,400 பதவிகளுக்கு ஆட்களை நியமனம் செய்வதற்கான தேர்வு தொடர்பாக, மின் துறை அமைச்சர் தங்கமணி, மின் வாரிய உயரதிகாரிகளுடன், நேற்று ஆலோசனை நடத்தினார்.
தமிழக மின் வாரியம், 600 உதவி பொறியாளர்; 1,300 கணக்கீட்டாளர்; 500 இளநிலை உதவியாளர் கணக்கு ஆகிய பதவிகளுக்கு, ஆட்களை தேர்வு செய்ய உள்ளது. இதற்கான தேர்வு அறிவிப்பை, இம்மாத துவக்கத்தில் வெளியிட்டது.மேலும், களப் பணிகளை மேற்கொள்ளும், 5,000, 'கேங்மேன்' பதவிக்கு, முதல் கட்டமாக, உடல் தகுதி தேர்வு முடிந்த நிலையில், விரைவில் எழுத்து தேர்வு நடத்தி, ஆட்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
இந்த தேர்வுகளை விரைவாக முடித்து, தகுதியான நபர்களை தேர்வு செய்வது தொடர்பாக, சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், அமைச்சர் தங்கமணி, வாரிய தலைவர் மற்றும் இயக்குனர்களுடன், நேற்று ஆலோசனை நடத்தினார். அவர், மின் வினியோக நிலைமை, புதிய அனல் மின் நிலையங்களின் பணிகளையும் கேட்டறிந்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.