சரி இந்த பட்ஜெட் 2020 எப்போது தாக்கல் செய்யப்பட விருக்கிறது, எந்த நேரம், யார் யார் கலந்து கொள்கிறார்கள், எதிர்பார்ப்புகள் என்னென்ன என்று தான் இக்கட்டுரையில் பார்க்க போகிறோம்
பழமையான முறைப்படி ஆரம்பித்துள்ள இந்த அச்சிடும் பணி 10 நாட்களுக்கும் நிறைவு பெறும் என்றும் கூறப்படுகிறது. மேலும் வரவிருக்கும் பிப்ரவரி 1 அன்று தனது இரண்டாவது பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யவிருப்பதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த பட்ஜெட் 2020 உரையானது காலை 11 மணிக்கு தொடங்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
சீர்திருத்தம்
பட்ஜெட்டுக்கு இன்னும் இரண்டு வாரங்கள் மட்டுமே உள்ள நிலையில், முன்னாள் நிதிச் செயலாளர் எஸ் சி கார்க், வருமான வரி திட்டத்தில் சில சீர்திருத்தங்களை முன்வைத்துள்ளார். மேலும் ஒரு எளிய நான்கு விகித தனிநபர் வருமான வரி கட்டமைப்பைக் கொண்டு வர வேண்டும் என்றும் பரிந்துரைத்துள்ளார்
மேலும் பல பெரிய வரி சீர்திருத்தங்கள் உள்ளன. அவை தனி நபர் வருமான வரிகளின் வரிவிதிப்பு கட்டமைப்புக்கு அவசியமானவை என்றும் கார்க் கூறியுள்ளார். தற்போது எட்டு விதமான வருமான வரி அடுக்குகள் உள்ளன. அவற்றில் மிக உயர்ந்த வரி விகிதம் 40% ஆகும். ஆக பட்ஜெட் 2020ல் மத்திய அரசு இதை பரிசீலிக்க வேண்டும் என்றும் முன்மொழிந்துள்ளார்.
இப்படி வரி விகிதம் இருக்கலாம் அதன் ஒரு பகுதியாக ஆண்டு வருமானம் 5 லட்சத்துக்கும் கீழ் உள்ள வருவாய்க்கு வரி இருக்கக் கூடாது என்றும்,
இதே 5 லட்சத்திலிருந்து 10 லட்சம் ரூபாய்க்குள் வருமானம் உடையவர்களுக்கு 5 சதவிகித வரியையும்,
10 - 25 லட்சம் ரூபாய் வரையில் வருமானம் உள்ளவர்கள் 15 சதவிகித வரியையும்,
இதே 25 - 50 லட்சம் ரூபாய் வருமானத்திற்கு 25 சதவிகித வரியையும்,
50 லட்சத்தும் மேல் வருமானம் உடையவர்களுக்கு 35 சதவிகித வரி விகிதத்தையும் கார்க் முன்மொழிந்துள்ளார்.
மூன்று பட்ஜெட்களில் வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்த கார்க், மத்திய அரசு செஸ் மற்றும் கூடுதல் கட்டணம் இல்லாமல் வருமான வரி கட்டமைப்பைக் கொண்டு வந்தால் அது வரி செலுத்துவோரால் வரவேற்கப்படும் என்றும் கூறியுள்ளார். மேலும் டிவிடெண்ட் டிஸ்ரிபியூசன் வரியை (Dividend Distribution Tax ) ரத்து செய்ய வேண்டும் என்றும் கார்க் கூறியுள்ளார்
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.