சிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா? அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, January 16, 2020

Comments:0

சிவில் சர்வீஸ் தேர்வெழுத போறீங்களா? அரசு வேலை பெற அருமையான டிப்ஸ்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சமீப காலமாக அரசு வேலை வாய்ப்பிற்கு பல மடங்கு அதிகமாக அரசாங்க வேலை தேடுவோர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. லட்சக் கணக்கான பட்டதாரிகள் அரசு வேலைக்காக இரவு பகலாக தயாராகி வருகின்றனர்.
மத்திய அரசு வேலை, மாநில அரசு வேலை, பொதுத்துறை நிறுவனம், வங்கி என அரசாங்கத்திற்கு உட்பட்டு வருடந்தோறும் காலிப் பணியிடங்கள் இருந்தாலும், அதனை எதிர்கொள்வது சிரமமாகவே உள்ளது. இதற்கு காரணம் ஒழுங்கான தேர்வு தயார் நிலையை நாம் கடைப்பிடிக்காதது தான். அதற்கான சில டிப்ஸ்கள் தான் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது.
கட்டாயமான மதிப்பெண்
தற்போது தேர்வு காலம், பல்வேறு போட்டி தேர்வுகள் ஒருபக்கம் இருக்க 5, 8ம் வகுப்புகளுக்கே பொதுத் தேர்வுகள் என்ற அடிப்படை வந்துவிட்டது.
இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் நுழைவுத் தேர்வுகளிலும், அரசு பொதுத் தேர்வுகளிலும் நல்ல மதிப்பெண் எடுத்தால் தான் நினைத்த வேலையில் அமர முடியும். கல்வித் துறையில் முன்னேற அதிகமாக மதிப்பெண் எடுப்பது கட்டாயமாகின்றது.
வேலை வாய்ப்புகள்
அரசு வேலைக்கு தயாராகிறோம் என்றால் நாம் முதலில் செய் வேண்டியது வேலை வாய்ப்பு குறித்த அறிவிப்பை பெறுவது தான். இன்றைய நவீன இன்டெர்நெட் யுகத்தில் அனைத்து தகவலையும் தெரிந்து கொள்ள பல்வேறு செயலிகளும், இணையதளங்களுமே போதுமானது. அது மட்டுமின்றி ஆன்லைன் விண்ணப்பப் படிவங்கள், விண்ணப்பிக்கும் முறை, விண்ணப்பிக்கும் இணையதளம், விண்ணப்பிக்கும் கடைசிநாள் என அனைத்து தகவல்களும் ஒரே இடத்தில் கிடைக்கிறது.
திட்டமிட்ட பயிற்சி
வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பித்தவுடன் நம்மில் பெரும்பாலானோர் செய்யும் தவறு, தேர்வுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு படித்து தயார் செய்து கொள்ளலாம் என விட்டுவிடுவதுதான். முதலில் அந்த தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் மதிப்பெண் முறையைத் தெரிந்து கொள்வது கட்டாயம். அவ்வாறு அறிந்துகொண்ட தகவல்களைக் கொண்டு தேர்விற்கு என நீங்கள் ஒதுக்கும் கால அட்டவணை தயாரிக்க வேண்டும்.
சில மணி நேரமே போதும்
போட்டித் தேர்வுகளில் கேட்கப்படும் கேள்விகள் பெரும்பாலும் சிறு வயது முதல் கல்லூரி வரையில் நாம் பயின்றவையாகத் தான் இருக்கும். எனவே அரசுத் துறை தேர்வுகளுக்குத் தினமும் சில மணி நேரங்களை முழுமையாக ஒதுக்கினால் போதுமானது.
மாதிரி வினாத்தாள்கள்
தேர்விற்கு தயாராகிக் கொண்டிருக்கும் நாட்களிலேயே நாம் பயின்றவற்றை ஒரு தேர்வாக எழுதிப் பார்ப்பது சிறந்தது. முன்னதாக கூறியது போல் முந்தைய ஆண்டு கேள்வித்தாள்களையும், அதற்கான விடைகளையும் சேகரித்து இதனை மேற்கொள்ளலாம்.
கூடுதல் திறமைகள்
தொழில்நுட்பம் வளர்ச்சியடைந்த இன்றைய காலகட்டத்தில் உலகமே கணினி மயமாகிவிட்டது. அதில் அரசு அலுவலகங்கள் மட்டும் விதிவிலக்கல்ல. எனவே, அனைத்து விண்ணப்பதாரர்கள் மத்தியில் தங்களுடைய தனித்திறமைகளை மேம்படுத்திக் கொள்ளுதல் என்பது அவசியம். தட்டச்சு, கணினி பயன்பாடு மற்றும் அந்தந்த துறைகளுக்குச் சார்ந்த திறன்களை வளர்த்துக் கொள்வது மிக முக்கியமானது.
பொது அறிவும் அவசியம்
போட்டித் தேர்வுகளுக்கு தயாராகி வருவோர் பின்தங்கும் பகுதியே பொது அறிவு பகுதியில் தான். மாதக்கணக்கில் புத்தகத்தை மட்டுமே படித்து வரும் அவர்கள் சமீபத்திய, பொதுவான சில தகவல்களைச் சேகரிக்க தவறிவிடுகின்றனர். எனவே, தற்காலிக நிகழ்வுகளையும் விரல் நுனியில் வைத்துக் கொள்வது கட்டாயம். பொது அறிவிற்கும், தற்காலிக நிகழ்வுகளுக்கும் நிறைய வித்தியாசங்கள் உள்ளன. தினமும் ஒரு மணி நேரம் முதல் 30 நிமிடங்கள் வரையில் இதற்காக ஒதுக்க வேண்டும்.
மன வலிமை மிக அவசியம்
குறிப்பிட்ட சில பணியிடங்களுக்கு பல ஆயிரம், லட்சம் பேர் போட்டி போடும் நிலையில் தங்களுக்கான மன வலிமையை பெற்றிருப்பது மிக மிக அவசியம். தேர்வு அறையில் அந்த 2 முதல் 3 மணி நேரத்தில் தாங்கள் தயார் செய்தவற்றை எந்த பதட்டமும் இல்லாமல் வெளிப்படுத்த வேண்டும். எத்தனையோ பேர் இந்த திறமையை வளர்க்க தவறிவிடுவதால் தான் தோற்று விடுகின்றனர்.
யுபிஎஸ்சி
யுபிஎஸ்சி போன்ற போட்டித் தேர்வுகளுக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ளது பொருந்தும். அதில், ஐ.ஏ.எஸ் ஆக, பட்டப்படிப்பை முடித்திருந்தாலே போதுமானது. அடுத்து ஐ.ஏ.எஸ் தேர்வுக்கு என்னென்ன படிக்க வேண்டும் என்பதை யூ.பி.எஸ்.சி பாடத்திட்டம் வகுத்துத்தருகிறது. அதைப் பதிவிறக்கம் செய்துகொண்டு படித்தால் வெற்றி உங்கள் கைவசம் தான்.
முதல் நிலை முதன்மை நிலை
பொதுவாக ஐஏஎஸ் உள்ளிட்ட தேர்வுகள் முதல்நிலை, முதன்மைத் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடைபெறும். இதில், முதல்நிலைத் தேர்வு இரண்டு தாள்களைக்கொண்டிருக்கும். இந்தத் தாள்கள், சரியான விடைகளைத் தேர்ந்தெடுக்கும்வகையில் இருக்கும். முதல் தாள் General Studies. இது பொது அறிவைச் சோதிக்கக்கூடியது.
முதன்மைத் தேர்வு
முதல்நிலைத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே அடுத்த நிலையான முதன்மைத் தேர்வில் பங்கேற்க முடியும். முதல்நிலை தேர்வில் எவ்வளவு மதிப்பெண் பெறுகிறீர்கள் என்பதை உங்களுடைய ரேங்கிங் பட்டியலில் கணக்கிடுகிறார்கள். திறனறிவு தேர்வில் 33 சதவிகிதம் மதிப்பெண் பெற்றாலே தகுதி பெற்றுவிடலாம்.
படிக்கும்போதே அரசு வேலை
படிக்கும்போது சிவில் சர்வீஸ் போன்ற அரசுத் தேர்விற்கு தயாராவது தவறில்லை. ஆனால், முழு நேரத்தையும் அரசு வேலைக்காக என ஒதுக்கிவிடாமல் இருந்ந வேண்டும். பள்ளி, கல்லூரி படிக்கும் போதே செய்தித்தாள்களைப் படியுங்கள். அரசியல், சுற்றுவட்டார செய்திகளை கவனியுங்கள். நண்பர்களுடன் இதுகுறித்தான நல்ல விவாதங்களில் மேற்கொள்ளுங்கள்.
எத்தனை முறை படித்தாலும் மறந்துவிடுகிறதா?
ஒரு முறை அல்லது தொடர்ச்சியாக படித்தாலும் அது மனதில் நிற்காமல் மறந்துவிடுவதற்கான காரணம் படித்தவற்றை மீண்டும் படிக்காமல் இருப்பதுதான். இயல்பான மனப்பாங்கில் படிக்கும்போது 24 மணி நேரத்தில் 70 சதவிகிதம் பகுதி மறந்துவிடும் எனவும், ஒரு வாரத்தில் மீதம் உள்ள 50 சதவிகிதமும் மறந்துவிடும் என்றும் உளவியல் வல்லுநர்கள் கணிக்கின்றனர்.
வெற்றி நிச்சயம்
எந்த ஒன்றில் வெற்றி பெற வேண்டும் என்றாலும் அதில் ஆர்வம் கொண்டிருக்க வேண்டும். படிக்கும் போதே ஆர்வத்துடன் படித்தால் தேர்வின் போது வெற்றி நிச்சயமே. மேலே குறிப்பிடப்பட்டுள்ளதை மனதில் வைத்து வரும் போட்டித் தேர்வுகளில் வெற்றியடையுங்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews