பொதுவாக ஒரு பிராண்டின் பெயர் பிரபலமாவதைப் போல் அதன் நிறுவனர் பிரபலம் ஆவது இல்லை. ஆனால், இன்று ஸ்டீவ் ஜாப்ஸ் என்றாலே சட்டென நம் கண் முன் தோன்றுவது கடித்த ஆப்பில் சின்னம் தான். உலக அளவில் மிகப் பெரிய தொழில்நுட்ப புரட்சி ஏற்படுத்தியதில் ஒருவர் தான் ஸ்டீவ் ஜாப்ஸ். தொழில்நுட்ப நிறுவனங்களுக்கெல்லாம் தலைவனாக விளங்கும் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கியவர்.
கட்டணம் செலுத்த முடியாத ஸ்டீவ்
1972 ல் ஸ்டீவ் ஜாப்ஸ் Reed College-யில் சேர்ந்தார். ஆனால் அந்த கல்லூரியில் கட்டணம் மிக அதிகமாக இருந்ததால் அவரின் வளர்ப்பு பெற்றோர்களால் கல்வி கட்டணத்தைக் கட்ட முடியவில்லை. அதனால் ஒரு செமஸ்டர் மட்டுமே முடித்த நிலையில் கல்லூரி படிப்பை இடையில் நிறுத்தினார். அதோடு விட்டு விடாமல், ஏதேனும் சாதிக்க வேண்டும் என்ற கனவுடன் 1976 ல் ஆப்பிள் நிறுவனத்தைத் தொடங்கினார்.
பில் கேட்ஸ்
உலகிலேயே பெரிய பணக்காரர் யார் எனக் கேட்டால் சற்றும் யோசிக்காமல் நாம் அளிக்கும் பதில் பில் கேட்ஸ். அந்தளவிற்கு பிரபலம். அவருக்கு சிறு வயது முதலேயே கணினியில் ஆர்வமும், அறிவும் இருந்தது. 1973 ல் ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். ஆனால், தனது கனவிற்காக உழைக்கும் பொருட்டு கல்லூரி படிப்பை முடிக்கும் முன்னரே பல்கலைக் கழகத்தை விட்டு விளகி, 1975-ம் ஆண்டு பால் ஆலன் உடன் சேர்ந்து மைக்ரோசாப்ட் நிறுவனத்தை தொடங்கினார். அன்று அவர் எடுத்த கடினமான முடிவு இன்று அவரை உலகின் முதல் நிலை கோடீஸ்வரராக உயர்த்தி இருக்கிறது.
பேஸ்புக் நிறுவனத்தின் அதிபர் மார்க் ஜுக்கர்பெர்க் 2004ம் ஆண்டு ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தில் படித்தார். இவர் படித்த போது பேஸ்புக் ஆராய்ச்சியில் ஈடுபட்டு படிப்பில் கவனம் செலுத்தாததால் மார்க் ஜுக்கர்பெர்க்கை பல்கலை வெளியேற்றியது. ஒரு ஓய்வு அறையில் தொடங்கப்பட்ட பேஸ்புக் இன்று பல பேரை ஓய்வில்லாமல் செய்துவிட்டது. இன்று உலகின் மிகப் பெரிய இளம் கோடீஸ்வரர் மார்க் மார்க் ஜுக்கர்பெர்கும் ஒருவர்.
மைகேல் டெல்
டெல் கணினி உலக அளவில் விற்பனைச் சந்தையில் தனக்கென தனி இடத்தை பதிவு செய்த நிறுவனம். இந்த டெல் நிறுவனத்தை தொடங்கியவர் தான் மைகேல் டெல். டெல் பெற்றோர்கள் அவரை ஒரு மருத்துவராக்க வேண்டும் என்றே விரும்பினர். 1983-ஆம் ஆண்டு டெல் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவருக்கு படிப்பை விட கணினியில் மிகுந்த ஆர்வம் இருந்ததால் முதல் வருடத்துடன் கல்லூரியை விட்டு விளக்கினார். 1984 ல் டெல் நிறுவனத்தை உருவாக்கினார்.
உலகில் முன்னணி சமூக வலைத்தளம் என்றால் அது டிவிட்டர் தான். இதன் இணை நிறுவனர் மற்றும் தலைமை செயல் அதிகாரி ஜாக் டோர்சே. தனது சிறு வயது முதலே கணினி மற்றும் மென்பொருட்கள் உருவாக்கத்தில் ஆர்வம் கொண்ட இவர் Missouri University of Science and Technology கல்லூரியில் சேர்த்தார். பின், அங்கிருந்து விலகி New York University Tandon School of Engineering ல் சேர்ந்தார். ஆனால் அதிலிருந்து கல்லூரி படிப்பை இடையில் நிறுத்திக் கொண்டார்.
வாடகைக் கார்
கல்லூரி படிப்பை பாதியில் நிறுத்திய ஜாக் டோர்சே பிறகு 2010-ல் இணையத்தின் மூலம் வாடகைக் கார் சேவையை தொடங்கினார். இந்த துணிகர முயற்சியே டிவிட்டர் எனும் மிகப் பெரிய சமூக வலைத்தளத்தை தொடங்குவதற்கான மூலகாரணமாக அவருக்கு அமைந்தது. தொடர்ந்து, 2006-ல் ஜாக் டோர்சே, இவான் வில்லியம்ஸ் மற்றும் சில வல்லுநர்கள் இணைந்து டிவிட்டரைத் தொடங்கினர்.
இவான் வில்லியம்ஸ்
இவான் வில்லியம்ஸ் டிவிட்டரின் இணை நிறுவனர் மற்றும் முன்னாள் தலைமை செயல் அதிகாரி. அவர் ஒரு விவசாய பண்ணையில் வளர்ந்தவர். University of Nebraska பல்கலைக்கழகத்தில் சேர்ந்த அவர் ஒன்றரை ஆண்டு மட்டுமே படித்த நிலையில் அந்த பல்கலைக்கழகத்தை விட்டு விலகினார். 2006-ல் இவான் வில்லியம்ஸ், ஜாக் டோர்சே அணியில் சேர்ந்து டிவிட்டரை தொடங்கினர்.
உங்களிடம் ஆன்ரைடு போன் இருந்தா அதில் கண்டிப்பாக வாட்ஸ்அப் செயலியும் இருக்கும். அதை நிறுவியவர் தான் ஜான் கோம். 1995 ல் San Jose State University பல்கலைக் கழகத்தில் சேர்ந்த இவர் படிப்புச் செலவுக்காக ஒரு கணினி நிறுவனத்தில் பகுதி நேர வேலையைச் செய்தார். அப்போதுதான் யாஹு நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். ஜான் கோம்க்கு யாஹு நிறுவன வேலை பிடித்துப் போனதால் கல்லூரி படிப்பைப் பாதியிலேயே நிறுத்தினார்.
டிராவிஸ் கலானிக்
இன்று நீங்கள் இருக்கும் இடத்திற்கே நீங்கள் விரும்பிய உணவை ருசிக்க முடியும் என்றால் அதில் உபரின் பங்கு அதிகமாகவே இருக்கும். அட ஆமாங்க, டிராவிஸ் கலானிக் தொடங்கிய நிறுவனம் தான் உபர். இதில் கூடுதல் சிறப்பு என்னவென்றால் உலகமெங்கும் பரந்து விரிந்திருக்கும் ஸ்டார்ட்டப் நிறுவனம் உபர் தான். 66 நாடுகளில் 507 க்கும் மேற்பட்ட நகரங்களில் இதன் சேவைகள் உள்ளது.
65 பில்லியன் டாலர்
டிராவிஸ் கலானிக் The University of California, Los Angeles (UCLA) பல்கலைக்கழகத்தில் படித்து கொண்டிருக்கும் போது படிப்பை இறுதிவரை முடிக்காமல் நிறுத்தினார். பின் 1998-ல் கல்லூரி நண்பர்களுடன் சேர்ந்து Scour என்ற file sharing technology சேவை நிறுவனத்தை தொடங்கினார். தொடர்ந்து, 2009ஆம் ஆண்டு அலெக்சாண்டர் ஹாங்க், காரெட் கேம்ப் ஆகியோருடன் சேர்ந்து உபர் நிறுவனத்தை தொடங்கினார். இன்று இதன் மதிப்பு கிட்டத்தட்ட $65 பில்லியன் டாலர்.
1978-ல் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் தத்துவவியல் படித்துக்கொண்டிருந்த ஜான் மெக்கே சில காரணத்தால் படிப்பை நிறுத்தினார். பிறகு ரீனீ லாவ்சன் ஹார்டி என்பவருடன் சேர்ந்து SaferWay என்ற காய்கறி கடையை தொடங்கினார். இதுவே இன்றைய அமெரிக்காவின் சங்கிலி தொடர் இயற்கை பொருள் சூப்பர்மார்கெட் Whole Foods நிறுவனமாகும்.
லாரி எலிசன்
தான் தொடங்கிய Oracle நிறுவனத்தை உலகின் இரண்டாவது மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாக உருவாக்கியவர் தான் லாரி எலிசன். போர்பஸ் பட்டியலில் 2014-ல் உலகின் 5 வது மிகப்பெரிய பணக்காரர். 2016-ல் 7 வது மிகப்பெரிய பணக்காரர். 1962-ல் லாரி எலிசன் Illinois பல்கலைக்கழகத்தில் சேர்ந்தார். அவரின் வளர்ப்புத் தாய் புற்றுநோயால் இறக்கவே, இரண்டாம் ஆண்டில் பல்கலைக்கழகத்திலிருந்து விலகினார்.
சில மாதங்கள் கழித்து சிகாகோ பல்கலைக்கழகத்தில் இயற்பியல் மற்றும் கணிதப் பாடப்பிரிவில் சேர்ந்த லாரி எலிசன், அதிலும் தொடரமுடியாமல் சிறிது காலத்திலேயே படிப்பை நிறுத்தி, கலிபோர்னியாவில் உள்ள பல நிறுவனங்களில் புரோகிராமராக பணியாற்றினார். 1977 ல் Ampex Corporation யில் அமெரிக்காவின் CIAக்கு database உருவாகும் பணியில் சேர்ந்தார். இந்த பணிக்கு குறியீட்டு பெயராக Oracle என்றழைத்தனர்.
லாரி எலிசன் Ampex நிறுவன முன்னாள் மேற்பார்வையாளருடன் சேர்ந்து $2000 முதலீட்டுடன் மென்பொருள் நிறுவனத்தை தொடங்கினார். இதுவே Oracle என்ற மைக்ரோசாப்ட் அடுத்து உலகின் மிகப்பெரிய மென்பொருள் நிறுவனமாகும்.
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.