Breaking

Saturday, February 08, 2020

இன்று(8-ந் தேதி) இரண்டு மாவட்டங்களுக்கு உள்ளூர் விடுமுறை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கடலூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு...
வடலூர் வள்ளலார் சபையில் தைப்பூச திருவிழா நடைபெறுவதையொட்டி கடலூர் மாவட்டத்தில் வருகிற பிப்ரவரி 8-ந் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் உத்தரவிட்டுள்ளார். மேலும், அன்றைய நாளில் அனைத்து கல்வி நிறுவனங்களிலும் சிறப்பு வகுப்புகளை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். பிப்ரவரி 8ம் தேதி தைப்பூச ஜோதி தரிசனத்தை ஒட்டி கடலூரில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
வடலூரில் அருட்பிரகாச வள்ளலார் நிறுவிய தெய்வ நிலையத்தில் ஒவ்வொரு வருடமும் தைப்பூச விழா வெகுவிமரிசையாக நடைபெறும். இந்த வருடம் வரும் பிப்ரவரி 8ம் தேதி 149வது ஆண்டு தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெற இருக்கிறது. தைப்பூச ஜோதி தரிசனத்தையொட்டி வடலூர் தெய்வ நிலையத்தில் வருகிற 7ம் தேதி கொடியேற்றம் நடைபெற இருக்கிறது. இதற்கான முன்னேற்பாடுகளை செய்யும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இந்த ஜோதி தரிசன விழாவில் லட்சக்கணக்கான சன்மார்க்க அன்பர்கள் வடலூரில் திரள்வார்கள். இதற்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடந்து வருகிறது. இந்நிலையில் வடலூர் வள்ளலார் தெய்வ நிலைய தைப்பூச ஜோதி தரிசனம் நடைபெறுவதையொட்டி வரும் 8ம் தேதி கடலூரில் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது என்று மாவட்ட ஆட்சியர் அன்புச்செல்வன் அறிவித்துள்ளார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog