Search This Blog
Friday, January 17, 2020
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
CLICK HERE TO DOWNLOAD FULL PDF
சென்னை: தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹு நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுரைக்கிணங்க, தேசிய வாக்காளர் தினம், சென்னை கலைவாணர் அரங்கத்தில் வருகிற 25ம் தேதி கொண்டாடப்பட உள்ளது. தேர்தல் குறித்த அறிவை இளைஞர்களுக்கும், எதிர்கால வாக்காளர்களுக்கும் கொண்டு சேர்க்கும் வகையில் இந்திய தேர்தல் ஆணையம், தேசிய வாக்காளர் தினம், 2020க்கான கருப்பொருளாக `வலிமையான மக்களாட்சிக்கு தேர்தல் கல்வியறிவு’ என அறிவித்துள்ளது. இதன் ஒரு பகுதியாக பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு வினாடி வினா நிகழ்ச்சி, சென்னை கலைவாணர் அரங்கத்தில் 23ம் தேதியன்று பிற்பகல் 12 மணி முதல் 5.30 மணி வரை நடைபெற உள்ளது.
CLICK HERE TO DOWNLOAD FULL PDF
9ம் வகுப்பு முதல் கல்லூரி இளநிலை பயிலும் மாணவர்கள் வரை போட்டியில் கலந்து கொள்ளலாம். ஆர்வமுள்ள மாணவர்கள் தங்களின் பெயர், பயிலும் கல்வி நிறுவனத்தின் பெயர், பயிலும் வகுப்பு மற்றும் கைபேசி எண் ஆகிய தகவல்களை goalquiz@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம். இதுகுறித்து எழும் ஐயங்களுக்கு 98409 27442 என்ற எண்ணை தொடர்பு கொள்ளலாம். 20ம் தேதி வரை பதிவு செய்யலாம். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசு 50,000, 2ம் பரிசு 30,000, மூன்றாம் பரிசு 20,000 வழங்கப்படும்.
CLICK HERE TO DOWNLOAD FULL PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
COMPETITION
STUDENTS
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி: முதல் பரிசு 50,000
தேசிய வாக்காளர் தினத்தை முன்னிட்டு மாணவர்களுக்கு வினாடி வினா போட்டி: முதல் பரிசு 50,000
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.