👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழக அஞ்சல் துறை தலைவர் சம்பத் அஞ்சலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:தமிழகம் முழுவதும் 89 தபால் உதவியாளர் 65 தபால்காரர் 77 பன்முக அஞ்சல் ஊழியர் என 231 பணியிடங்கள் விளையாட்டு பிரிவின் கீழ் நிரப்பப்பட உள்ளன.தடகளம் பேட்மின்டன் கால்பந்து கோ - கோ வாலிபால் டென்னிஸ் கோல்ப் நீச்சல் என 42 வகையான விளையாட்டு பிரிவுகளில் சாதித்த வீரர்கள் விண்ணப்பிக்கலாம். இந்தியா சார்பில் சர்வதேச அளவிலான போட்டிகளில் பங்கேற்றவர்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படும்.அடுத்து தேசியளவில் பதக்கம் வென்றவர்கள் தேசியளவில் பல்கலை மற்றும் பள்ளிகளுக்கு இடையே பரிசு பெற்றவர்கள் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
தபால் உதவியாளர் தபால்காரர் பணிக்கு 18 - 27 வயது வரையிலும் பன்முக அஞ்சல் ஊழியருக்கு 25 வயது வரையிலும் வரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தபால் உதவியாளருக்கு குறைந்தபட்சம் பத்தாம் வகுப்பு கல்வித் தகுதி அவசியம். தபால்காரருக்கு பிளஸ் 2 மற்றும் பன்முக ஊழியருக்கு பத்தாம் வகுப்பு போதுமானது. விருப்பம் உள்ளவர்கள்
www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்தில் விண்ணப்பங்களை நேரடியாக பதிவிறக்கம் செய்து வரும் 31க்குள் பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும்.மேலும் விபரங்களை
ndiapost.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.