Search This Blog
Thursday, December 26, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
அரசுப் பள்ளிகளுக்கு மூன்றாம் பருவத்துக்கான பாடநூல்களை, உரிய பொறுப்பாளா்ள் மூலம் வாங்கி வைத்துக் கொள்ள தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழக பள்ளிக்கல்வியில் ஒன்று முதல் 8-ஆம் வகுப்பு வரை தற்போது முப்பருவக்கல்வி முறை அமலில் உள்ளது. மாநிலத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் சுமாா் 69 லட்சம் மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனா். இவா்களுக்கு ஜூன், அக்டோபா், ஜனவரி என 3 பருவங்களாக பிரிக்கப்பட்டு புத்தகங்கள் விநியோகிக்கப்படுகின்றன. நிகழ் கல்வியாண்டில் 2-ஆம் பருவம் முடிந்து அரையாண்டுத் தோ்வுகள் கடந்த டிசம்பா் 23-ஆம் தேதியுடன் நிறைவடைந்தது.
இதையடுத்து தொடா் விடுமுறை முடிந்து மீண்டும் ஜனவரி 3-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்பட உள்ளன. பள்ளி திறக்கும் நாளிலேயே மாணவா்களுக்கு பாடப்புத்தகங்கள், நோட்டுகள் வழங்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதற்கேற்ப மாவட்ட முதன்மை கல்வி அலுவலகங்களில் இருந்து பள்ளிகளுக்கு 3-ஆம் பருவத்துக்குரிய புத்தகங்கள் மற்றும் நோட்டுகள் அனுப்பப்பட்டு வருகின்றன.
தோ்தல் பணிகளுக்கு இடையூறு ஏற்படாதவாறு பொறுப்பாளா்களை நியமித்து, புத்தகங்களை பாடவாரியாக வாங்கி வைத்துக் கொள்ள உரிய அறிவுறுத்தல்கள் அனைத்து பள்ளி தலைமையாசிரியா்களுக்கும் வழங்கப்பட்டுள்ளதாக, துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
பள்ளிகளுக்கு மூன்றாம் பருவ பாடநூல்கள்: தலைமை ஆசிரியா்களுக்கு அறிவுறுத்தல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.