👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கரூர் மாவட்டம் பஞ்சப்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, முதுகலை இயற்பியல் ஆசிரியர் பெ.தனபாலின் கல்விச் சேவையைப் பாராட்டி, தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை சார்பில் அப்துல் கலாம் விருது வழங்கப்பட்டது.
அப்துல் கலாமின் சிந்தனைகளை மாணவர்களிடம் கொண்டு சேர்ப்பதற்காக டாக்டர் ஏபிஜெ அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு ஆசிரியர் பெ.தனபால் இயக்கத்தில் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டது. இது 1,300 பள்ளி, கல்லூரிகளுக்குக் கட்டணமின்றி வழங்கப்பட்டு, 7 லட்சம் மாணவ, மாணவிகளைச் சென்றடைந்தது.
மேலும், ஆசிரியர் பெ.தனபால் தனது வழிகாட்டல் மூலம் 20 அறிவியல் கண்டுபிடிப்புகளைக் கண்டுபிடித்து, அப்துல் கலாம் துளிர் இல்லம் மூலமாக சாதாரண மாணவர்களையும் சாதனை மாணவர்களாக்கினார். ஜப்பான், பின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளுக்கு அரசுமுறைப் பயணமாக இந்தியா சார்பில் மாணவர்களைப் பங்கேற்க வைத்துள்ளார்.
அரசுப் பள்ளியில் பயிலும் 400-க்கும் மேற்பட்ட கிராமப்புற மாணவர்களை மாவட்டம், மாநிலம், தென்னிந்திய, தேசிய மற்றும் சர்வதேச அளவில் 360 மேடைகள் அழைத்துச் சென்று இளம் விஞ்ஞானிகள் சான்று பெற வைத்துள்ளார்.
ஆசிரியர் பெ.தனபாலின் கல்விச் சேவையை பாராட்டி, தமிழ் கலை இலக்கிய அறக்கட்டளை 2019-ம் ஆண்டின் சாதனையாளர் விருதாக அப்துல் கலாம் விருது அறிவிக்கப்பட்டது. தஞ்சாவூரில் அண்மையில் நடைபெற்ற விழாவில், அறக்கட்டளை நிறுவனர் சதீஷ்குமார், ஆசிரியர் பெ.தனபாலுக்கு அவ்விருதை வழங்கினார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.