👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு எழும்பூர் முதல் விமானநிலையம் வரையில் 260 மாற்றுத்திறனாளி மாணவர்கள் நேற்று மெட்ரோ ரயிலில் அழைத்துச்செல்லப்பட்டனர். ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 3ம் தேதி உலக மாற்றுத்திறனாளிகள் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி, சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம் மற்றும் மாநில மாற்றுத்திறனாளிகள் நலத்துறையுடன் இணைந்து நேற்று எழும்பூர் முதல் விமானநிலையம் மெட்ரோ ரயில் நிலையம் வரையில் மாணவர்கள் அழைத்துச்செல்லப்பட்டனர்.
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், கடலூர், கரூர், சேலம், கோயம்பத்தூர், திருநெல்வேலி, கன்னியாகுமரி மற்றும் தேனி ஆகிய 10 மாவட்டங்களில் உள்ள அரசு உதவிபெறும் சிறப்பு பள்ளிகளில் பயிலும் 260 மாற்றுத்திறனாளி மாணவர்கள் இந்த இலவச சுற்றுலாவில் பங்கேற்றனர். மேலும், இவர்களுக்கு மெட்ரோ ரயில் மற்றும் மெட்ரோ ரயில் நிலையங்களில் உள்ள வசதிகளை பற்றி மெட்ரோ ரயில் நிறுவன ஊழியர்கள் விளக்கிக்கூறினார்கள்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.