PGTRB தேர்வு குளறுபடி குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Tuesday, November 12, 2019

PGTRB தேர்வு குளறுபடி குறித்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

??Join Our??WhatsApp??Group??Click Here ??Join Our??Telegram??Group??Click Here??Join Our??Facebook??Page??Click Here??Join Our??Twitter??Page??Click HereAdd 9361194452 To Ur Groups
29.09.2019 ஞாயிறு அன்று காலையில் நடந்து முடிந்த முதுகலை ஆசிரியர் தமிழ் தேர்வில் தவறாக விடப்பட்ட 10 முதல் 15 வரையிலான வினா விடைகளுக்கு (தமிழ் - 6, கல்வி உளவியல் - 4, பொது அறிவு - 1) தக்க ஆதாரங்களுடன் ஆட்சேபனை தெரிவித்தும் இறுதி விடைகள் சரி செய்யாமலேயே, மேற்கொண்டு இறுதி முடிவு விடப்பட்டு, சான்றிதழ் சரிபார்ப்பும் நடந்து வருவது சட்டப்படி குற்றம் ஆகும்.
மேலும் பல தமிழ் தேர்வர்களுக்கு இறுதி விடைகளுக்கும் இறுதி முடிவுகளுக்கும் மதிப்பெண்கள் வித்தியாசம் வருவதும் அம்பலமாகி உள்ளது. இது குறித்து சேலம் மாவட்டத்தைச் சேர்ந்த சாம்ராஜ், வெங்கடாசலம், பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த அம்பாயிரம் மற்றும் முத்துலிங்கம் ஆகியோர் சென்னை உயர் நீதி மன்றத்தில் writ மனு தாக்கல் செய்துள்ளனர். முதுகலைத் தேர்வு வழக்கு மனுவில் கோறப்பட்டவை:
29.09.2019 அன்று நடந்த Pgtrb தமிழ் தேர்வு சென்ற ஆண்டுபோல் கடினமாக இல்லாமல் சாதாரணமாக (சுலபமாக) இருந்தது. அதனால் இம்முறை நடந்த Pgtrb தமிழ் பாடத்தில் அதீத தேர்வாளர்கள் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. அதே சமயம் முதன் முதலாக இம்முறை ஆன்லைன் தேர்வு முறை நடைமுறை படுத்தப்பட்டதும், அவசர அவசரமாக trb ஒவ்வொரு செயலையும் (தோராய விடைகள், இறுதி விடைகள் வெளியிடாமலேயே மதிப்பெண் பட்டியல், திருத்தப்படாத இறுதி விடைகள், மதிப்பெண்களைக் குழப்பும் தேர்வு முடிவுகள், பெயர், பதிவு எண், மதிப்பெண்கள், சாதி, பிறந்ததேதி இடம்பெறாது வெறும் வரிசை எண், பதிவு எண் கொண்ட CV பட்டியல், இணையத்தில் வெளிப்படையாக விடாமல் மின்னஞ்சலுக்கு அனுப்பப்பட்ட நேர்க்காணல் அழைப்புக் கடிதம் ) செய்து வருவதில் ஏதோ குளறுபடி உள்ளதாக தோன்றுகின்றது. எனவே முதலில் நடந்து முடிந்த PGTRB Tamil தேர்வின் வேலைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும். அடுத்தகட்டமாக வினா விடைகள் 100 சாதவீதம் சரிசெய்யப்பட வேண்டும். பின்னர் தேர்வெழுதியோர்களுக்கு திருத்தப்பட்ட இறுதி விடைகள் (Revised Final key) அடிப்படையில் மதிப்பெண்கள் வழங்கி முறையாயாக (பெயர், பதிவு எண், பிறந்த தேதி, சாதி, மதிப்பெண் ) சான்றிதழ் சரிபார்ப்பு பட்டியல் விடவேண்டும். பின்னர் இறுதி பட்டியல் வெளியிட வேண்டும் போன்ற பல கோரிக்கைகள் தக்க ஆதாரங்களுடன் நீதிமன்றத்தில் சமர்பிக்கப்பட்டது.
??Join Our??Facebook??Page??Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews