INFORMATIONEMIS - வருகைப் பதிவுக்கு புதிய மொபைல் ஆப்! எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? New Student Attendance App Model - Step by Step Instruction - Download here(PDF)
EMIS - வருகைப் பதிவுக்கு புதிய மொபைல் ஆப்! எவ்வாறு பதிவிறக்கம் செய்வது? New Student Attendance App Model - Step by Step Instruction - Download here(PDF)
Open ஆனதும் Login ID, password என்ற பகுதி தோன்றும்.
அதில் Login ID என்பதில் உங்களது பள்ளியின் 11 இலக்க Dise எண்ணையும், Password என்பதில் உங்களது பள்ளியின் EMIS Password -ஐயும் கொடுத்து Sing in கொடுத்து உள் நுழையவும்.
New Student Attendance App Model - Step by Step Instruction - Download here(PDF)
அதில் Attendance, TNTP என்று இரண்டு பகுதிகளில் Attendance என்பதை கிளிக் செய்யவும்.அதில் உங்களது பள்ளியின் விவரங்கள் தோன்றும்.
பின் வலது மேல்புறத்தில் + என்ற உள்ளதை கிளிக் செய்யவும்.
அதில் வகுப்பு வாரியாக கிளிக் செய்தால் மாணவர்கள் பட்டியல் வரிசையாக இருக்கும். அதில் மாணவர்களுக்கு நேர் பகுதியில் P என்று இருக்கும், மாணவர் வந்திருந்தால் அதை மாற்றம் செய்ய தேவை இல்லை, மாணவர் வரவில்லை என்றால் மட்டுமே அதனை கிளிக் செய்து A என்று மாற்றிக்கொள்ளவும்.
பின்பு அனைத்து மாணவர்களது வருகையினை சரிபார்த்து கடைசியாக கீழ் SAVE என்பதை கிளிக் செய்யவும்.
இவ்வாறு அந்தந்த வகுப்பு ஆசிரியர்கள் தங்கள் வகுப்பு மாணவர்களுக்கு வருகைப் பதிவினை பதிவிடவும்.
குறிப்பு :
தற்போது வந்துள்ள attendance app ல் தங்கள் பள்ளி மாணவர்களுக்கு attendance பதிந்த உடன் மாணவர்கள் பெற்றோருக்கு SMS செல்லும் வசதி செய்யப்பட்டு உள்ளதாக தகவல்.
New Student Attendance App Model - Step by Step Instruction - Download here(PDF)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.