தேர்வில் பூஜ்ஜியம் வாங்கிய பெண்ணுக்கு சுந்தர் பிச்சை பாராட்டு..! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, November 23, 2019

Comments:0

தேர்வில் பூஜ்ஜியம் வாங்கிய பெண்ணுக்கு சுந்தர் பிச்சை பாராட்டு..!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
சமூக வலைதளத்தில் மாணவி ஒருவர், தான் தேர்வில் பூஜ்ஜியம் மார்க் பெற்றதை பதிவிட்டதற்கு கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை பாராட்டு தெரிவித்துள்ளார். சரபினா நான்ஸ் 26, என்பவர் புகழ் பெற்ற நிறுவனமான கலிபோர்னியா பல்கலையில் வானியற்பியலில் பிஎச்.டி., செய்கிறார். வானியற்பியல் சூப்பர்நோவாக்களை ஆராய்ச்சி செய்து வருகிறார். அவர் இயற்பியல் தேர்வில் பூஜ்ஜியம் மார்க் பெற்றதாகவும், அதற்குப் பின்னர் தனது துறையை மாற்றி &'ஆஸ்ட்ரோபிசிக்ஸ்&' துறையில் சிறந்து விளங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். “தேர்வில் பூஜ்ஜியம் வாங்குவது உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல” என்றும் அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார். மாணவியின் இந்த டுவிட்டர் பதிவை தனது பக்கத்தில் பகிர்ந்த கூகுள் சி.இ.ஓ., சுந்தர் பிச்சை, அவரை பாராட்டியுள்ளார்.
இந்த மாணவியின் பதிவுக்கு 57 ஆயிரம் லைக்குகள், 10 ஆயிரம் ரீட்வீட்கள் என சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. சாராஃபினா நான்ஸ் என்ற பெண் அவரது இயற்பியல் தேர்வில் பூஜ்ஜியம் மதிப்பெண் பெற்றதாகவும் அதற்குப் பின்னர் தனது துறையை மாற்றி ஆஸ்ட்ரோபிசிக்ஸ் துறையில் சிறந்து விளங்குவதாகவும் குறிப்பிட்டிருந்தார். “தேர்வில் பூஜ்ஜியம் வாங்குவது உங்களது திறனுக்கான மதிப்பீடு அல்ல” என்றும் அந்த மாணவி குறிப்பிட்டிருந்தார்.
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews