Spoken English - 90 நிமிடங்கள் பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, November 27, 2019

Comments:0

Spoken English - 90 நிமிடங்கள் பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
DSE - ஆங்கிலம் பேச்சுத்திறன் வளர்த்தல் கட்டகம் மூலம் பள்ளிகளில் பேச்சுத்திறன் வளர்க்க தொடக்க, நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை உத்தரவு. 1 முதல் 5 ஆம் வகுப்பு வரை வாரத்திற்கு 90 நிமிடத்திற்கான ஒருபாடவேளையில் ஆங்கிலம் பேச்சுத்திறன் பயிற்சி அளிக்கும் வகையில் கால அட்டவணை தயாரிக்க வேண்டும்.
அரசு பள்ளிகளில் மாணவர்களின் ஆங்கில பேச்சுத்திறன் வளர்த்தல் ( Spoken English) கட்டகம் பள்ளிக்கல்வித்துறை வெளியீடு. ( கட்டகம் மூலம் வாரத்திற்கு 90 நிமிடங்கள் பயிற்சி அளிக்க ஆசிரியர்களுக்கு உத்தரவு. ) மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழக பள்ளிக்கல்வித்துறை பல்வேறு மாற்றங்களை தொடர்ந்து செய்து வருகிறது. சமீப காலமாகவே அதிரடியான அறிவிப்புகளை அறிவித்து மக்களின் செல்வாக்கை அதிகம் பெற்ற துறையாக பள்ளிக்கல்வித்துறை செய்ல்பட்டு வருகிறது. புதிய பாடத்திட்டம் வந்தது முதல் 11ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு, 1200 மதிப்பெண் 600 ஆக குறைக்கப்பட்டது வரை பல மாற்றம் நிகழ்ந்துள்ளது. அதேபோல 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு நேரம் 2.30 மணியாக இருந்து வந்தது. இந்நிலையில், மாணவர்களின் நலன் கருதி கூடுதலாக 30 நிமிடம் சேர்த்து 3 மணி நேரமாக அதிகப்படுத்தப்பட்டுள்ளது. CLICK HERE TO VIEW THE PRO PDF
CLICK HERE TO VIEW THE PRO PDF மேலும் புதிய பாடத்திட்டம் வந்துள்ளதால் கூடுதலாக தேர்வு நேரத்தை ஒதுக்க வேண்டுமென்ற கோரிக்கையை ஏற்று இந்த கல்வியாண்டு முதல் பொதுத்தேர்வில் கூடுதலாக அரை மணி நேரம் ஒதுக்கப்பட்டது. இந்நிலையில் இன்று அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்கும் நோக்கில் அரசுப் பள்ளிகளில் SPOKEN ENGLISH பயிற்சி நடத்த தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. ஆங்கிலப்பேச்சு திறன் பயிற்சி வகுப்புகளை கல்வித்துறை அலுவலர்கள் ஆய்வு செய்வார்கள் என்று பள்ளிக்கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது. இதனால் அரசு பள்ளி மாணவர்கள் கூடுதல் உற்சாகம் அடைந்துள்ளனர். அரசு பள்ளிகளிலும் ஸ்போக்கன் இங்கிலீஷ் பயிற்சி என்பதால் தனியார் பள்ளிகள் கதிகலங்கியுள்ளன CLICK HERE TO VIEW THE PRO PDF
👍Join Our📱Telegram🌍Group👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews