Search This Blog
Monday, October 28, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'தாட்கோவின் பொருளாதார மேம்பாட்டு திட்டங்களுக்கு மானியத்துடன் கடன் உதவி பெற, ஆதி திராவிடர்கள் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம்' என, கலெக்டர் அன்பழகன் தெரிவித்துள்ளார்.இதுகுறித்து அவர் வெளியிட்ட செய்திக்குறிப்பு: தாட்கோ மூலம் செயல் படுத்தப்படும் பொருளாதார திட்டங்களுக்கு, ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். நிலம் வாங்குதல் மற்றும் மேம்படுத்துதல், தொழில் முனைவோர் பொருளாதார மேம்பாட்டுத் திட்டம், இளைஞர்களுக்கான சுயவேலை வாய்ப்பு திட்டம், மருத்துவமனை அமைத்தல், பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு, சில்லரை விற்பனை நிலையம், மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கான சுழல்நிதி, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கான பொருளாதாரக் கடனுதவி போன்ற பலவிதமான பொருளாதார திட்டங்களுக்கு கடனுதவி வழங்கப்படும்.
மாற்றுத் திறனாளிகள் சுயஉதவி குழுக்களுக்கான சுழல்நிதி மற்றும் பொருளாதார கடனுதவி, மாவட்ட கலெக்டர் விருப்புரிமை நிதி, மேலாண்மை இயக்குனர் விருப்புரிமை நிதி, இந்திய குடிமை பணி முதன்மைத்தேர்வு எழுதுவோருக்கு நிதியுதவி, குரூப் 1 தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு நிதியுதவி, சட்டப் பட்டதாரிகளுக்கு, பட்டய கணக்கர், செலவு கணக்கர்களுக்கு நிதியுதவி உள்ளிட்ட திட்டங்களுக்கும் மானியத்துடன் கடன் வேண்டி விண்ணப்பிக்கலாம்.
விண்ணப்பிப்பவர்கள், 18 முதல், 65 வயதுள்ள, இந்து ஆதி திராவிடர்களாக இருக்க வேண்டும். இதில் இளைஞர்களுக்கான சுயவேலைவாய்ப்பு திட்டத்திற்கு வயது வரம்பு, 18 முதல், 45 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. விண்ணப்பதாரர்களின் குடும்ப ஆண்டு வருமானம், ஒரு லட்சம் ரூபாயாக இருக்க வேண்டும். இந்த திட்டத்தில் பயன்பெற விரும்புபவர்கள், http://application.tahdco.com என்ற இணையதள முகவரிக்கு சென்று விண்ணப்பத்தை ஆன்லைனில் பதிவு செய்யலாம். அவ்வாறு பதிவு செய்யும்போது ரேஷன் கார்டு எண் அல்லது இருப்பிடச்சான்று, சாதிச்சான்று, வருமானச்சான்று ஆகியவற்றின் எண், வழங்கப்பட்ட தேதி ஆகியவற்றை பதிவு செய்யவேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
தாட்கோ கடனுதவி திட்டங்கள்; ஆன்லைனில் விண்ணப்பிக்க அழைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.