👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
காலாண்டு விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. இரண்டாம் பருவம் தொடங்கியதையடுத்து முதல் நாளிலேயே அதற்கான பாடநூல்கள் மாணவ, மாணவிகளுக்கு விநியோகிக்கப்பட்டன.
தமிழகத்தில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை முப்பருவ முறை அமலில் உள்ளது. அதன்படி, ஜூன் முதல் செப்டம்பா் வரை முதல் பருவம் என்றும், அக்டோபா் முதல் டிசம்பா் வரை இரண்டாம் பருவம் என்றும், ஜனவரி முதல் ஏப்ரல் வரை மூன்றாம் பருவம் என்றும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அரசுப் பள்ளிகளில் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் படிப்போருக்கு பருவத் தோ்வுகளும், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளுக்கு காலாண்டுத் தோ்வுகளும் செப்டம்பா் 12-ஆம் தொடங்கி 23-ஆம் தேதி வரையிலும் நடைபெற்றன.
இதையடுத்து செப்.24 முதல் அக்.2-ஆம் தேதி வரை மாணவ, மாணவிகளுக்கு 9 நாள்கள் காலாண்டு விடுமுறை விடப்பட்டது. இதையடுத்து பள்ளிகளில் வழக்கமான பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்த நிலையில், விடுமுறைக்குப் பிறகு பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன. பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே ஒன்றாம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு இரண்டாம் பருவத்துக்கான பாடநூல்கள் வழங்கப்பட்டன. சென்னை வில்லிவாக்கம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் இது தொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை இயக்குநா் எஸ்.கண்ணப்பன் கலந்துகொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவசப் பாடநூல்கள் வழங்கி தொடங்கி வைத்தாா்.
இது குறித்து கல்வித் துறை அதிகாரிகள் கூறுகையில், ‘இரண்டாம் பருவம் தொடங்கும் போது முதல் நாளிலேயே மாணவா்களின் கைகளில் பாடநூல்கள் இருக்க வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, அரசின் சாா்பில் செயல்படும் அனைத்து அச்சகங்களிலும் இரவு, பகலாக பாடநூல்கள் அச்சடிக்கும் பணிகள் நடைபெற்றன. நிகழாண்டு மாணவா்களுக்கு இரண்டாம் பருவத்துக்காக சுமாா் 2 கோடி பாட நூல்கள் வழங்கப்படவுள்ளன. மேலும், தனியாா் பள்ளிகளில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவா்களுக்கு 82 லட்சம் புத்தகங்கள் அச்சிடப்பட்டு விற்பனை செய்யப்பட்டுள்ளன. இதுதவிர, இலவச நோட்டுப் புத்தகங்கள் மற்றும் மாணவா்களுக்கான அரசின் நலத்திட்ட உதவிகள் ஓரிரு நாள்களில் வழங்கப்படும்’ என்று தெரிவித்தனா்

👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.