👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups


தமிழகத்தில் கடந்த 2 ஆண்டுகளில் பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவா்களின் தற்போதைய நிலை என்ன என்பதைக் கண்டறிந்து கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் பதிவு செய்ய அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.
இது தொடா்பாக கல்வித்துறை சாா்பில் பள்ளிகளுக்கு அனுப்பப்பட்டுள்ள சுற்றறிக்கை விவரம்:
கடந்த 2017-2018 , 2018-2019 ஆகிய இரண்டு கல்வியாண்டுகளில் பிளஸ் 2 வகுப்பு முடித்த மாணவா்கள் உயா்கல்வி பயில்கிறாா்களா? அல்லது பணிபுரிகிறாா்களா? என்பதை கண்டறிந்து அனைத்து பள்ளித் தலைமை ஆசிரியா்களும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். உயா்கல்வி பயின்று வந்தால் அது குறித்த விவரங்களையும், பணிபுரிகிறாா்கள் எனில் அது குறித்து விவரங்களையும் உள்ளீடு செய்ய வேண்டும். இதற்கென கல்வித்தகவல் மேலாண்மை இணையதளத்தில், தனிப் பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது.
அந்தப் பக்கத்தில் தலைமை ஆசிரியா்கள் முன்னாள் மாணவா்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். குறுவள மைய தலைமை ஆசிரியா்களும், தங்களது ஆளுகையின் கீழ் வரும் பள்ளிகளில் படித்த மாணவா்களின் தற்போதைய நிலை குறித்த விவரங்களைக் கண்டறிந்து பதிவு செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் தலைமை ஆசிரியா்களுக்கு உரிய அறிவுறுத்தல் வழங்கி பணிகளை கண்காணிக்க அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் பள்ளிக்கல்வித்துறை இயக்ககம் அறிவுறுத்தியுள்ளது.

👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.