அனைத்து அரசு கல்லுாரிகள் காலியிடங்களை நிரப்ப உத்தரவு - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, October 31, 2019

Comments:0

அனைத்து அரசு கல்லுாரிகள் காலியிடங்களை நிரப்ப உத்தரவு

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
அனைத்து அரசு கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் உள்ள பேராசிரியர் காலியிடங்களை முழுவதும் நிரப்புமாறு மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. எனவே பணி நியமன தடைகளை விலக்க தமிழக உயர்கல்வித் துறை முடிவு செய்துள்ளது.தமிழகத்தில் கலை அறிவியல் படிப்புகளை நடத்தும் 13 பல்கலைகள் தமிழக உயர்கல்வி அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் செயல்படுகின்றன. மருத்துவ பல்கலை சுகாதாரத் துறையின் கீழ் செயல்படுகிறது. மீன்வளம் கால்நடை சட்டம் இசை ஆகியவை தனித் தனி பல்கலைகளின் கீழ் இயங்குகின்றன.இவற்றில் உயர்கல்வி துறையின் கீழ் இயங்கும் பல்கலைகளில் பேராசிரியர்களை நியமிக்க இரண்டு ஆண்டுகளாக உயர்கல்வி துறை அனுமதி அளிக்கவில்லை. அண்ணாமலை பல்கலைகளில் அதிக பேராசிரியர்கள் உள்ளதால் அவர்களை இடமாற்றம் செய்து காலியிடங்கள் நிரப்பப்பட்டன.இதற்கு பேராசிரியர் சங்கத்தினர் மற்றும் 'நெட் செட்' தேர்வு பெற்றவர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதைத் தொடர்ந்து பல்கலைகளில் காலியிடங்களை நிரப்புவது நிறுத்தி வைக்கப்பட்டது.இந்நிலையில் பல்கலை மானிய குழுவான யு.ஜி.சி. புதிய உத்தரவை பிறப்பித்துள்ளது.பல்கலைகள் மற்றும் கல்லுாரிகளில் காலியாக உள்ள பேராசிரியர் பணியிடங்களை விரைந்து நிரப்ப வேண்டும். நியமனத்தில் யு.ஜி.சி.யின் விதிகளை பின்பற்ற வேண்டும். காலியிடங்களை நிரப்பாத பல்கலைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உத்தரவில் யு.ஜி.சி. அறிவித்துள்ளது.இதையொட்டி கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளில் பேராசிரியர் பணிக்கான காலியிடங்களை நிரப்ப பல்கலைகள் முடிவு செய்துள்ளன. உயர்கல்வி துறையின் வழிகாட்டுதலின்படி இந்த பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு உத்தரவிட்டுள்ளதாக உயர்கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews