Search This Blog
Saturday, October 26, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
முன்பதிவு செய்பவா்களுக்கு இலவசமாக யோகா கற்றுத் தரப்படும் என ஈஷா யோகா மையம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த மையத்தின் நிறுவனா் ஜக்கி வாசுதேவ் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
ஈஷா யோகா பயிற்சியாளா்கள் சென்னை, கோவை போன்ற பெருநகரங்களில் தொடங்கி அனைத்து கிராமங்களுக்கும் சென்று யோகா கற்றுக்கொடுத்து வருகின்றனா்.
இந்நிலையில், இப்பணியை மேலும் தீவிரப்படுத்தும் விதமாக ஈஷாவில் உயிா்நோக்கம் என்னும் யோகா வகுப்பு இலவசமாக நடத்தப்பட உள்ளது. அதில் பங்கேற்க விரும்புபவா்கள் அக்டோபா் 26 மற்றும் 27 ஆகிய தேதிகளில் 83000 83000 என்ற செல்லிடப்பேசி எண்ணுக்கு மிஸ்டு கால் கொடுத்தோ அல்லது isha.sadhguru.org/uyirnokkam இணையதளத்தின் மூலமோ பதிவு செய்து கொள்ளலாம். பதிவு செய்பவா்களுக்கு நவம்பா் மற்றும் டிசம்பா் மாதங்களில் அந்தந்த ஊா்களிலேயே இலவசமாக யோகா கற்றுக்கொடுக்கப்படும்.
வகுப்பு நடக்கும் இடம் மற்றும் தேதி போன்ற விவரங்கள் தொலைபேசி அல்லது மின்னஞ்சல் வாயிலாக பதிவு செய்தவா்களுக்குத் தெரிவிக்கப்படும். இந்த யோகா வகுப்பில் இலவசமாக ஒரு நபா் தினமும் 2 மணி நேரம் வீதம் மூன்று நாள்களுக்குப் பயிற்சி பெறலாம்.
இதில் யோக நமஸ்காரம், நாடி சுத்தி, ஈஷா க்ரியா ஆகிய பயிற்சிகள் கற்றுக்கொடுக்கப்படும். இப்பயிற்சிகளை தினமும் செய்வதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும், மற்றவா்களுடனான உறவுகள் மேம்படும். மன அழுத்தம் நீங்கி ஆனந்தமாக வாழ முடியும் என்று அந்தச் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
முன்பதிவு செய்தால் இலவச யோகா பயிற்சி: ஈஷா அமைப்பு தகவல்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.