Breaking

Monday, October 28, 2019

கட்டுமானத்துறையில் மதிப்பீடுதகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ராமநாதபுரம்: முறைசாரா தொழிலாளர்களுக்கு கட்டுமானத்துறையில் மதிப்பீடு நடத்துவதற்கான விண்ணப்பங்கள் நவ.,30 வரை அளிக்கப்படுவதால் தகுதியானவர்கள் விண்ணப்பிக்கலாம்.முன் கற்றலுக்கான அங்கீகாரம் திட்டத்தில், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முறைசாரா தொழிலாளர்களுக்கு கட்டுமான துறையில் தொழிலாளர்களின் முன் அனுபவ தொழிலின் அடிப்படையில் மதிப்பீடு நடத்தி சான்றிதழ் வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2019-20ம் ஆண்டிற்கு முறைசாரா தொழிலாளர்களுக்கு அவர்களின் முன் அனுபவ தொழிலின் அடிப்படையில் மேற்பார்வையாளர், மின்சார பணியாளர், கொத்தனார், கம்பி வளைப்பவர், தச்சு வேலை செய்பவர், பிளம்பர், பெயின்டர், டைல்ஸ் ஒட்டுபவர் பிரிவுகளுக்கு மதிப்பீடு நடக்கிறது.இதற்கான விண்ணப்பங்களை நவ.,30 வரை ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்துாரில் உள்ள அரசினர் தொழிற்பயிற்சி நிலையங்களில் அளிக்கப்படுகிறது. விண்ணப்பிக்க விருப்பம் உள்ளவர்கள் தங்களின் பள்ளி மாற்று சான்றிதழ் நகல், ஆதார் அட்டை நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படத்துடன் மேலே குறிப்பிட்டுள்ள தொழிற்பயிற்சி நிலையங்களில் காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை விண்ணப்பிக்கலாம்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog