Search This Blog
Monday, October 28, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
திருச்சி மாவட்டத்தில் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் விழுந்த சிறுவன் சுர்ஜித்தை மீட்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், பல்வேறு இடங்களிலும் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதற்குப் பொதுமக்கள் ஆர்வம் காட்டிவருகிறார்கள்.
திருச்சி மாவட்டம், மணப்பாறையை அடுத்த நடுக்காட்டுப்பட்டியைச் சேர்ந்த பிரிட்டோ-கலாமேரி தம்பதியின் இரண்டாவது மகனான சுர்ஜித் வில்சன் என்ற 2 வயதுக் குழந்தை, கடந்த 25-ம் தேதி மாலை 5.40 மணிக்குக் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணற்றில் தவறி விழுந்தது.
விவசாயப் பணிக்காகக் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு, வீட்டின் அருகே உள்ள விளைநிலத்தில் 600 அடி ஆழத்துக்கு ஆழ்துளைக் கிணறு தோண்டினார். அதில் தண்ணீர் இல்லாததால் ஆழ்துளைக் கிணற்றை பயன்படுத்தவில்லை. ஆனால், அதை முறையாக மூடாததால் அதில் குழந்தை சுர்ஜித் தவறி விழுந்துவிட்டது.
குழந்தை சுர்ஜித்தைப் பத்திரமாக மீட்கும் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. சிறுவன் சுர்ஜித் பத்திரமாக மீட்கப்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நாடுமுழுவதும் பிரார்த்தனைகள் நடைபெற்று வருகின்றன. மண்ணுக்குள் சிக்கியுள்ள குழந்தையை எப்படியாவது மீட்டுவிட மாட்டார்களா என்கிற ஏக்கத்தில் பொதுமக்கள் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளில் விழும் குழந்தைகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால் அவற்றை மூடிவைக்க வேண்டும் என்கிற விழிப்புணர்வு தற்போது பொதுமக்களிடம் மேலோங்கி வருகிறது. தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனத்தினர், அரசியல் அமைப்பினர் போன்றோரும் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூட வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிறார்கள்.
தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர், தமிழகம் முழுவதும் உள்ள அச்சுறுத்தும் ஆழ்துளைக் கிணறுகளை மூடுவதில் ஆர்வம் காட்டி வருகிறார்கள். இது தொடர்பாக அந்த அமைப்பின் சார்பாக தொலைபேசி எண்களையும் வெளியிட்டுள்ளனர். அதனால் பொதுமக்கள் பலரும் தங்கள் பகுதியில் உள்ள ஆழ்துளைக் கிணறுகள் குறித்த தகவல்களைத் தெரிவித்து வருகிறார்கள்.
அதன்படி, நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே உள்ள திரிகூடபுரத்தில் குடியிருப்புப் பகுதியில் ஆபத்தான நிலையில் ஆழ்துளைக் கிணறு இருப்பது தொடர்பாக தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பின் மாவட்டத் தலைமைக்கு அந்தப் பகுதி மக்கள் தகவல் தெரிவித்தனர். உடனடியாகத் தென்காசி மாவட்ட தலைவர் ஜலாலுதீன் உத்தரவின்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அமைப்பினர் அதை முழுமையாக மூட நடவடிக்கை எடுத்தார்கள்.
இது குறித்து தவ்ஹீத் அமாஅத் தென்காசி மாவட்டத் தலைவர் ஜலாலுதீன் கூறுகையில், ‘’குடிநீர்த் தேவைக்காகவும் விவசாயப் பணிகளுக்காகவும் தோண்டப்படும் ஆழ்துளைக் கிணற்றில் தண்ணீர் இல்லாவிட்டால் அதை அப்படியே போட்டுவிடும் நிலைமை உள்ளது. அதன் காரணமாகத் தமிழகம் முழுவதும் பல்வேறு விபத்துகள் ஏற்பட்டிருக்கின்றன.
அதனால் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகள் குறித்த தகவல் கொடுத்தால் அதை நாங்களே மூடிக்கொள்வோம் என்பதை எங்கள் அமைப்பின் மாநிலத் தலைவர் சம்சுல் லுகா, மாநில பொதுச் செயலாளர் இ.முகமது ஆகியோர் தெரிவித்தார்கள். அதன்படி திரிகூடபுரத்தில் குடியிருப்பு அருகே இருந்த ஆழ்துளைக் கிணறுக் குறித்த தகவல் கிடைத்ததும் எங்கள் அமைப்பினர் அதை மூடினார்கள்.
இது போலத் தென்காசி மாவட்டத்தில் ஐந்துக்கும் மேற்பட்ட இடங்களில் மூடினோம். தேவைப்படும்போது மீண்டும் பயன்படுத்தும் வகையில் மூடிக் கொடுக்கிறோம். தொடர்ந்து எங்களுக்கு பல்வேறு பகுதிகளிலும் இருந்து கிடைக்கும் தகவலைத் தொடர்ந்து உரிய நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். இது போல, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களிலும் இந்தப் பணிகள் நடக்கின்றன’’ என்றார்.
இது போன்று அரசுத் துறையினரும் கைவிடப்பட்ட ஆழ்துளைக் கிணறுகளை மூடும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். தனியார் அமைப்புகள், தொண்டு நிறுவனத்தினரும், குழந்தைகளை அச்சுறுத்தும் வகையில் பொது இடங்களில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் ஆழ்துளைக் கிணறுகளை மூடி வருவது பலராலும் பாராட்டப்படுகிறது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
Home
TAMILNADU
`ஆழ்துளைக் கிணறுகளை மூடுகிறோம்; எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!'- தமிழகம் முழுவதும் களமிறங்கிய அமைப்பு
`ஆழ்துளைக் கிணறுகளை மூடுகிறோம்; எங்களைத் தொடர்பு கொள்ளுங்கள்!'- தமிழகம் முழுவதும் களமிறங்கிய அமைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.