👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் அதிகரித்துள்ளதற்காக, நாமக்கல்லுக்கு தேசிய விருது வழங்கப்பட உள்ளது,'' என, சமூக நலத்துறை அமைச்சர் சரோஜா பேசினார்.
நாமக்கல் மாவட்டம், ஈஸ்வரமூர்த்தி பாளையத்தில், அங்கன்வாடி பணியாளர்களுக்கு, 'ஸ்மார்ட் போன்' வழங்கும் விழா, பஞ்., அலுவலக புதிய கட்டடம் திறப்பு, மாற்றுத் திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் பெறுவதற்கான மதிப்பீடு முகாம் நடந்தது.இதில், அமைச்சர் சரோஜா பேசியதாவது: உடல் வளர்ச்சி, மனவளர்ச்சி, உடல் ஆரோக்கியம் ஆகியவற்றை, குழந்தைகள் அடைய வேண்டும்.
ரத்த சோர்வு, எடை குறைவில்லாத இந்தியாவை உருவாக்க வேண்டும் என்ற இலக்கை அடிப்படையாக வைத்து, மத்திய அரசின், 'போஷான் அபியான்' திட்டம் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டத்தின் அடிப்படையில், டில்லியில் நடந்த விழாவில், தமிழகம் மூன்று விருதுகளை பெற்றது. நாமக்கல் மாவட்டத்தில், பெண் குழந்தைகளின் பிறப்பு விகிதத்தை அதிகரித்ததற்காக, கலெக்டருக்கு மத்திய அரசின் சார்பில், விருது வழங்கப்பட உள்ளது. இவ்வாறு, அவர் பேசினார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U