👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''மாணவர் சேர்க்கை குறைந்துள்ள, இன்ஜினியரிங் கல்லுாரி வளாகங்களில், பாலிடெக்னிக் துவங்குவது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்,'' என, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர், அனில் சகஸ்ரபுதே தெரிவித்துள்ளார்.
கருத்தரங்கம்உயர் கல்வி நிறுவனங்களில், கல்வி தரத்தை மேம்படுத்துவது குறித்து, சென்னையில் கருத்தரங்கம் நடந்தது.இதில், அகில இந்திய தொழில்நுட்ப கல்வி கவுன்சிலான, ஏ.ஐ.சி.டி.இ., தலைவர், அனில் சகஸ்ரபுதே பங்கேற்றார்.பின், அவர் அளித்த பேட்டி:நாடு முழுவதும், இன்ஜினியரிங் கல்லுாரிகளில், மாணவர் சேர்க்கை குறைந்துள்ளது. ஆண்டு தோறும், பல்வேறு பாடப் பிரிவுகளில், மாணவர் சேர்க்கை குறைந்து வருகிறது.தேவையை விட அதிகமான கல்லுாரிகள் இருப்பதால், காலியிடங்கள் அதிகமாக உள்ளன.
அதனால், அடுத்த இரண்டு ஆண்டுகளுக்கு, புதிய இன்ஜினியரிங் கல்லுாரிகளுக்கு அனுமதி வழங்குவது நிறுத்தப்பட்டுள்ளது.அனுமதிமிக குறைவான எண்ணிக்கையில் மாணவர்கள் உள்ள, இன்ஜினியரிங் கல்லுாரிகளின் வளாகங்களில், பாலிடெக்னிக் அல்லது கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள் துவங்க அனுமதி வழங்கப்படுகிறது.அதற்கு, தேவையான விதிகளை பின்பற்றினால், உரிய அனுமதி வழங்கப்படும்.
இவ்வாறு, அவர் கூறினார். தமிழக உயர் கல்வி துறை முதன்மை செயலர், மங்கத்ராம் சர்மா கூறுகையில், ''தமிழகத்தில், 150 இன்ஜி., கல்லுாரிகள் வரை, ஒற்றை இலக்கத்திலேயே மாணவர்களை சேர்ந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த நிலையை மாற்றுவது குறித்து, கல்வி நிறுவன நிர்வாகிகளிடம் பேசப்படும்,'' என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U