Search This Blog
Sunday, September 29, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை ஒரு தங்கச் சுரங்கம்'' என்று ஐ.நா. சபையின் முன்னாள் இந்திய பிரதிநிதி சீனிவாசன் பேசினார்.
திருச்சி ஜோசப் கல்லுாரியில் 175வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இதன் துவக்க விழாவுக்கு மதுரை மண்டல இயேசு சபை தலைவர் டேனிஷ் பொன்னையா தலைமை வகித்தார்.
விழாவில் 'இன்றைய
உயர்கல்வி எதிர்நோக்கும் சவால்கள்' என்ற தலைப்பில் ஆய்வரங்கம் நடந்தது.
அதில் கல்வியாளரும் ஐ.நா. சபையின் முன்னாள் இந்திய பிரதிநிதியுமான சீனிவாசன் பேசியதாவது:
உயர்கல்வி திட்டத்தை மேம்படுத்தும் போது கல்வி நிலையங்களின் உட்கட்டமைப்பு ஆசிரியர்களின் கல்வி தொழில் நுட்பத்தின் பயன்பாடு தன்னாட்சி அதிகாரம் ஆராய்ச்சி சர்வதேச மயமாக்கல் ஆகியவற்றையும் கவனத்தில் கொள்ள வேண்டும். வெளி நாடுகளுடன் ஒப்பிடுகையில் தொழில் நுட்ப உதவியோடு கல்வி கற்பிப்பதில் பின் தங்கியிருக்கிறோம். 20ம் நுாற்றாண்டு பாடத்திட்டத்தை 19ம் நுாற்றாண்டு மனநிலையோடு 21ம் நுாற்றாண்டில் படித்து கொண்டிருக்கிறோம்.
மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை ஒரு தங்க சுரங்கம். அதில் தங்கமும் கிடைக்கும்; தேவையற்ற கசடுகளும் இருக்கும். எது தேவையோ அதை எடுத்து கொள்ள வேண்டும்.
புதிய கல்வி கொள்கையில் கல்வியை மேம்படுத்துவதற்கு கல்வி நிறுவனங்களுக்கு தேவையான முழு சுதந்திரம் அளிக்கும் அம்சம் இடம் பெற்றுள்ளது.
இவ்வாறு அவர் பேசினார்.
ஐ.நா. சபையின் தொழிற்சாலை மேம்பாட்டு அமைப்பின் முன்னாள்முதன்மை ஆலோசகர் ஜெபமாலை வினான்சி ஐ.நா. தொழிற்சாலை மேம்பாட்டு அமைப்பின் பிரதிநிதி முகமது எல்சையது கோலாலம்பூர் ஆசியா ஸ்கூல் ஆப் பிசினஸ் தலைவர் ராஜேஷ் ஆகியோரும் பேசினர்.
பல்வேறு துறைகளில் சாதனை புரிந்த ஜோசப் கல்லுாரி முன்னாள் மாணவர்களுக்கு 'பெருமை மிகு முன்னாள் மாணவர்' விருது வழங்கப்பட்டது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
புதிய கல்வி கொள்கை ஒரு தங்கச்சுரங்கம் ஐ.நா., முன்னாள் பிரதிநிதி பேச்சு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.