👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
"மதுரை காமராஜ் பல்கலை சார்பில் மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் மூலம் 2 ஆயிரம் மாணவர்கள் 2 ஆயிரம் கிராம இளைஞர்களுக்கு தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது" என உயர்கல்வி அமைச்சர் அன்பழகன் தெரிவித்தார்.இப்பல்கலையில் நடந்த 53 வது பட்டமளிப்பு விழாவில் அவர் பேசியதாவது:கற்பித்தல் மற்றும் ஆராய்ச்சிக்கு இணையாக இப்பல்கலையில் விரிவாக்கப் பணிக்கும் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. எட்டு மாதங்களில் 60 கோடி ரூபாய் மதிப்பிற்கு ஆராய்ச்சி தொடர்பான கருத்துருக்கள் சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. 4.05 கோடி ரூபாய் மத்திய அரசு நிதி பெறப்பட்டுள்ளது. சர்வதேச அளவிலான 25 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.மத்திய அரசின் மேக் இன் இந்தியா திட்டம் மூலம் 2 ஆயிரம் மாணவருடன் 2 ஆயிரம் கிராம இளைஞருக்கும் தொழில்முனைவோர் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.மாநில அளவில் 25820 பேர் ஆராய்ச்சி படிப்பிற்கு பதிவு செய்துள்ளனர். உயர் கல்வியை மேம்படுத்த மறைந்த முதல்வர் ஜெயலலிதா 82 புதிய கல்லுாரிகளை துவக்கினார். 1066 புதிய பாடப் பிரிவுகளை அறிமுகம் செய்தார். இதனால் உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தற்போது தமிழகம் முதலிடத்தில் உள்ளது என்றார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.