Search This Blog
Sunday, September 29, 2019
Comments:0
👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தேசிய சிறுபான்மையினர் வளர்ச்சி மற்றும் நிதி கழக உதவியுடன், 'டாம்கோ' திட்டத்தில், சிறுபான்மையின இளைஞர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி அளிக்கப்படுகிறது.திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஆயத்த ஆடை பயிற்சி மற்றும் வடிவமைப்பு மையத்தில், இலவச திறன் வளர்ப்பு பயிற்சியும், வேலை வாய்ப்பு பெறுவதற்கான உதவியும் செய்யப்படுகிறது.
இத்திட்டத்தில் 'எம்ப்ராய்டரி' பயிற்சி, 50 பயனாளிகளுக்கு, மூன்று மாதம் அளிக்கப்படுகிறது.சிறுபான்மையின வகுப்பை சேர்ந்த இஸ்லாமியர், கிறிஸ்துவர், புத்த மதத்தினர், சீக்கியர், பார்சியர், ஜெயின் பிரிவினர் விண்ணப்பிக்கலாம். குடும்ப ஆண்டு வருமானம், ஐந்து லட்சத்துக்கு மிகாமலும், 18 முதல், 55 வயதுக்கு உட்பட்டவராகவும் இருக்க வேண்டும். உண்டு, உறைவிட கட்டணம் வழங்கப்படாது.
பயிற்சியின் போது, ஒரு பயனாளிக்கு, 1,000 ரூபாய் வீதம் உதவித்தொகை அளிக்கப்படும். பயிற்சிக்கான நேர்காணல், '1 டி, முதல் குறுக்கு தெரு, சி.வி.நாயுடு தெரு, ஜெயாநகர், திருவள்ளூர் மாவட்டம் 602 001' என்ற முகவரியில் உள்ள பயிற்சி மையத்தில், அக்., 3ம் தேதி காலை, 11:00 மணிக்கு நடக்கும்.பயிற்சிபெற விரும்புவோர், அசல் ஜாதிச்சான்று, வருமான சான்றிதழ், ஆதார் அட்டை, கல்வி சான்றிதழ் ஆகிய சான்றிதழ்களுடன் நேர்காணலில் பங்கேற்கலாம்.மேலும் விவரங்களுக்கு, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தை தொடர்புகொள்ளலாம் என, மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U
எம்ப்ராய்டரி பயிற்சி பெற அழைப்பு!'டாம்கோ' திட்டத்தில் ஏற்பாடு
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment
நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.