Breaking

Saturday, September 21, 2019

காலாண்டு வினாத்தாள் வரவில்லை குழப்பத்தில் தலைமை ஆசிரியர்கள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மானாமதுரைசிவகங்கை கல்வி மாவட்டத்தில் காலாண்டு தேர்வில், 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி தேர்வுக்கான வினாத்தாள் நேற்று வரை வராததால் தலைமை ஆசிரியர்கள் குழப்பமடைந்துள்ளனர்.சிவகங்கை கல்வி மாவட்ட அரசு பள்ளிகளில் இன்று 10 ம் வகுப்பு மாணவர்களுக்கு உடற்கல்வி தேர்வு நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான வினாத்தாள் நேற்று வரை பள்ளிகளுக்கு வரவில்லை. மாற்று ஏற்பாடு செய்து கொள்ள கல்வித்துறை அதிகாரிகள் தலைமை ஆசிரியர்களிடம் தெரிவித்துள்ளனர்.தலைமை ஆசிரியர் ஒருவர் கூறியதாவது: நேற்று வரை வினாத்தாள் வரவில்லை. அதற்கு பதிலாக அந்தந்த பள்ளிகளில் உள்ள உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு வினாத்தாள் தயாரித்து மாணவர்களுக்கு தேர்வை நடத்துமாறு அதிகாரிகள் மூலம் அறிவுறுத்தப் பட்டுள்ளது.ஆனால் சிவகங்கை கல்வி மாவட்டத்தில் பல பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ளதால் அந்த பள்ளிகளில் எவ்வாறு இந்த தேர்வை நடத்துவது என்று பல தலைமைஆசிரியர்கள் குழப்பத்தில் உள்ளனர், என்றார்.முதன்மை கல்வி அலுவலர் பாலுமுத்துவிடம் கேட்ட போது: இந்த தேர்வுக்கான வினாத்தாள் சென்னையில் இருந்து வரவில்லை, அதனால் பள்ளிகளில் உடற்கல்வி ஆசிரியர்களை கொண்டு தேர்வு நடத்த மாற்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது, என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

No comments:

Post a Comment

நண்பர்களே.. வாசகர்களின் கருத்து சுதந்திரத்தை வரவேற்கும் இந்தப்பகுதியை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள அன்புடன் வேண்டுகிறோம்.

Total Pageviews

Search This Blog