தமிழக மாணவர்களுடன் சந்திராயன்-2 நிலவில் தரையிறங்குவதை பார்க்கும் மோடி. - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, September 05, 2019

தமிழக மாணவர்களுடன் சந்திராயன்-2 நிலவில் தரையிறங்குவதை பார்க்கும் மோடி.

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
சந்திரயான் 2 நிலவில் தரையிறங்குவதை பிரதமர் நரேந்திர மோடியுடன் இணைந்து, 60 மாணவர்கள் பார்வையிட உள்ளனர்.நிலவின் தெற்கு பகுதியை ஆய்வு செய்வதற்காக கடந்த ஜூலை 22ல் சந்திரயான் 2 விண்கலத்தை இஸ்ரோ அனுப்பியது. செப்., 02ம் தேதி, விண்கலத்தில் இருந்து விக்ரம் லேண்டர் தனியாக பிரிக்கப்பட்டு, தற்போது நிலவின் சுற்றுப்பாதையில் நிலவை நெருங்கி சுற்றி வருகிறது. செப்., 07 நள்ளிரவு 1.30 முதல் 2.30 மணியளவில் சந்திரயான் 2 நிலவில் தரையிறங்க உள்ளது. இதனை பிரதமர் மோடி நேரில் பார்வையிடுகிறார். அவருடன் சேர்ந்து பார்வையிட விருப்பமுள்ள 8 முதல் 10ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்காக இஸ்ரோ சார்பில் இணையதளம் வழியாக ஆக. 10 முதல் ஆக. 25 வரை வினாடி வினா போட்டி நடத்தப்பட்டது. இப்போட்டியில் மொத்தம் 10 நிமிடங்களில் 20 கேள்விகள் கேட்கப்பட்டது. இதில் ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்தும் முதலிரண்டு இடங்களை பிடித்த மாணவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டனர். இவர்கள் இஸ்ரோ மையத்தில், பிரதமர் மோடியுடன் சேர்ந்து சந்திரயான் 2 தரையிறங்குவதை பார்வையிடும் வாய்ப்பை பெற்றுள்ளனர் நிலவில் விக்ரம் லேண்டர் தரையிறங்குவதை பிரதமர் மோடியுடன் தமிழக மாணவர்கள் உட்பட 70 பேர் பார்வையிடுகின்றனர். இந்த நிகழ்ச்சி பெங்களூரில் உள்ள இஸ்ரோ மையத்தில் நடக்கின்றது.
நிலவின் தென்துவரத்தை ஆய்வு செய்ய கடந்த ஜூலை 22ல் சந்திராயன்-2 விண்கலன் வெற்றிகரமாக இஸ்ரோ ஏவியது. விக்ரம் லேண்டர் இந்த விண்கலன் ஆர்பிட், லேண்டர், ரோவர் என மூன்று நிலைகளை கொண்டதாகும். கடந்த சில நாட்களுக்கு முன் லேண்டர் விக்ரம் வெற்றிகரமாக பிரிக்கப்பட்டது. நிலவில் தரையிறங்குகிறது நாளை மறுநாள் (செப்.7ம்) நிலவில் தரையிறங்குகிறது. இதை பெங்களூரில் உள்ள இஸ்ரோ தலைமையத்தில் இருந்து பிரதமர் மோடி பார்வையிடுகிறார். அவருடன் அமர்ந்து நேரில் காட்சியை காண மாணவர்களுக்கு ஆன்லைன் விநாடி வினா போட்டி கடந்த மாதம் நடத்தப்பட்டது. தமிழக மாணவர்கள் இதில், 8 முதல் 10ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்கள் பங்கேற்றனர். தமிழகத்தை சேர்ந்த ரியா ராஜேஷ், பிரனவ், புதுச்சேரியை சேர்ந்த மதுமிதா, ஜி, சந்தோஷ் உட்பட 70 மாணவர்கள் வெற்றி வெற்றுள்ளனர். இவர்களில் 16 பேர் கேந்திரியா வித்யாலா பள்ளிகளை சேர்ந்தவர்கள்.
தரையிறங்கும் நேரம் லேண்டர் 'விக்ரம்' (ரோவர் 'பிரக்யன்' உள்ளே) செப்டம்பர் 7 ஆம் தேதி அதிகாலை 1:30 மணி முதல் 2:30 மணி வரை சந்திரனின் மேற்பரப்பில் தொடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. உலகமே ஆவலோடு எதிர்பார்ப்பு இந்தியா அனுப்பிய சந்திராயன்-2 விண்கலன் வெற்றிகரமாக தரையிங்குவதை காண உலகமே ஆவலோடு எதிர்பார்த்துள்ளது. எந்த நாடும் செய்யாத சாதனையாக சந்திராயன்-2 நிலவின் தென் துருவத்தில் இறங்கி சாதனை செய்ய இருகின்றது. தடைகளையும் தாண்டி சந்திராயன்-1 திட்டத்திற்கு பிறகு, சந்திராயன்-2 திட்டம் துவங்கும் முதல் பல்வேறு தடைகள் ஏற்பட்டது. பிறகு, தொழில்நுட்ப கோளாறு , கால நிலை உள்ளிட்டவைகளாலும் பல்வேறு முறை தள்ளி வைக்கப்பட்டது. நிலவில் தண்ணீர் நிலவின் தென் துருவத்தில் அதிகளவில் தண்ணீர் இருக்கின்றது. இங்கு மற்ற உயிரினங்கள் எவ்வாறு வாழ முடியும் என்றும் சந்திராயன்-2 ஆய்வு செய்கின்றது. அங்குள்ள கனிமங்கள் குறித்து இந்த ஆய்வு முக்கிய இடம் பெறும். விண்வெளியில் மிகப்பெரிய சாதனைனையும் செய்கின்றது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews