👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
கம்பெனி செக்ரட்டரிஷிப் தேர்வில், கோவையைச் சேர்ந்த மாணவர், அகில இந்திய அளவில் முதலிடம் பெற்றுள்ளார்.
&'கம்பெனி செக்ரட்டரிஷிப்&' படிப்புக்கான தேர்வு, இந்தாண்டு, ஜூன் மாதம், நாடு முழுவதும் நடந்தது. இதன் முடிவுகள், இந்திய கம்பெனி செக்ரட்டரி நிறுவனத்தின், www.icsi.edu எனும் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளன. இதில், &'எக்சிகியூட்டிவ்&' தேர்வை, புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் எழுதிய, கோவை மைய மாணவர் கோகுல், 19, அகில இந்திய அளவில் முதலிடம் பெற்று, சாதனை படைத்துள்ளார். இவர், கோவை, குறிச்சி ஹவுசிங் யூனிட்டை சேர்ந்தவர்.
கோகுலின் தந்தை ரவிக்குமார், பிளைவுட் வர்த்தகம் செய்து வருகிறார். தாய் சுமதி, குடும்பத்தலைவி. மூத்த சகோதரர், தந்தையுடன் இணைந்து, தொழில் செய்து வருகிறார்.
இதே, &'எக்சிகியூட்டிவ்&' தேர்வை, பழைய பாடத்திட்டத்தில் எழுதிய, கோவை மாணவி ஆருத்ரா, 19, அகில இந்திய அளவில், எட்டாவது இடம் பெற்றுள்ளார்.
&'கம்பெனி செக்ரட்டரிஷிப், எக்சிகியூட்டிவ்&' மற்றும், &'புரபஷனல்&' படிப்புக்கான அடுத்த தேர்வு, டிசம்பர், 20 முதல், 30 வரை நடக்கிறது. இதற்கான, &'ஆன்லைன்&' விண்ணப்ப பதிவுக்கான கடைசி நாள், செப்., 25 என அறிவிக்கப்பட்டுள்ளது.
கம்பெனி செக்ரட்டரி தேர்வில், தேசிய அளவில், முதலிடம் பெற்றது மிகுந்த மகிழ்ச்சி. முதலில் நான்கு மாதங்கள், காலை, மாலை வேளைகளில் நேரம் ஒதுக்கி படித்தேன். தேர்வுக்கு கடைசி ஒரு மாதம் மட்டும், முழு கவனத்துடன் படித்தேன். அதற்கு நல்ல பலன் கிடைத்துள்ளது.- கோகுல்முதலிடம் பெற்ற மாணவர்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U