👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தேவாரப் பாடல்களில் பழந்தமிழ் இன்னிசை பண்கள்&' என்ற தலைப்பிலான பயிற்சி பட்டறையில் பங்கேற்க விருப்பமுள்ள இசை ஆர்வலர்கள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப் பட்டுள்ளது.இது குறித்து இந்திரா காந்தி தேசிய கலை மையத்தின் மண்டல இயக்குனர் கோபால் கூறியதாவது:வரலாற்று சிறப்பும், வாழ்வியல் தத்துவமும் அடங்கிய தமிழ் கலை, கலாசார மாண்புகளை மீட்டெடுக்கும் வகையில், இந்திரா காந்தி தேசிய கலை மையமும், புதுச்சேரி பாரதியார் பல்கலை கூடமும் இணைந்து, வரும் 27,28 மற்றும் 29 ஆகிய தேதிகளில் &'தேவாரப் பாடல்களில் பழந்தமிழ் இன்னிசை பண்கள்&' என்ற தலைப்பில் மூன்று நாள் பயிற்சி பட்டறைக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.பாரதியார் பல்கலைக் கூடத்தில் நடைபெற உள்ள பயிற்சி பட்டறையில் பங்கேற்க 15 வயது முதல் உள்ள இசை ஆர்வலர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பயிற்சியில் சேர, இன்று (20ம் தேதிக்குள்) விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்களை பாரதியார் பல்கலைக் கூடத்தில் பெற்றுக் கொள்ளலாம். பயிற்சியில் கலந்து கொண்டவர்களை பண்ணிசை இசைக்க செய்து, சான்றிதழ் வழங்கப்படும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U