👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம் உள்ளிட்ட துணை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஒரு வாரத்துக்குள் தொடங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில், பி.எஸ்சி நர்சிங், பி.பார்ம், ஆய்வகத் தொழில்நுட்பம் உள்பட 17 வகையான துணை மருத்துவப் படிப்புகள் உள்ளன. அவற்றில் மொத்தமாக 12 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இடங்கள் இருக்கின்றன. அதில், அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கான மாணவர் சேர்க்கையை மருத்துவ கல்வி இயக்ககம் நடத்துகிறது.
இந்நிலையில், நிகழ் கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் மூலமாக பதிவிறக்கம் செய்யும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. அதன்படி, கடந்த மாதத்தில், விண்ணப்பங்கள் பதிவிறக்கம் செய்யப்பட்டு மருத்துவக் கல்வி இயக்ககத்தில் சமர்ப்பிக்கப்பட்டன. மொத்தமாக 23 ஆயிரத்து 778 விண்ணப்பங்கள் சமர்ப்பிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், அவை பரிசீலனை செய்யப்பட்டு சில நாள்களுக்கு முன்பு தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. அதில், மொத்தம் 22 ஆயிரத்து 155 பேருக்கு தரவரிசைகள் வழங்கப்பட்டிருந்தன.
இந்த நிலையில், மாணவர் சேர்க்கை விரைவில் நடவடிக்கைகள் தொடங்கும் என மருத்துவக் கல்வி இயக்ககத் தேர்வுக் குழு தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக தேர்வுக் குழுவின் செயலாளர் ஜி.செல்வராஜன் கூறுகையில், இந்த வார இறுதியிலோ அல்லது அடுத்த வார தொடக்கத்திலோ கலந்தாய்வு தொடங்கும் என்றார்.
மத்திய அரசு தமிழகத்துக்கு விலக்கு அளிக்காததன் காரணமாகவே நிகழாண்டில் சித்தா, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகள் நீட் தேர்வு அடிப்படையில் நடைபெறுவதாக சுகாதாரத் துறை அதிகாரிகள் விளக்கமளித்துள்ளனர்.
பாரம்பரிய மருத்துவப் படிப்புகளைப் பொருத்தவரை, அரும்பாக்கம் அறிஞர் அண்ணா அரசு பாரம்பரிய மருத்துவமனை வளாகத்தில் உள்ள சித்த மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யுனானி மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும், யோகா மற்றும் இயற்கை மருத்துவக் கல்லூரியில் 60 இடங்களும் உள்ளன.
அதேபோன்று திருநெல்வேலி மாவட்டம் பாளையங்கோட்டை சித்த மருத்துவக் கல்லூரியில் 100 இடங்கள், மதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உள்ள ஹோமியோபதி மருத்துவக் கல்லூரியில் 50 இடங்கள், நாகர்கோவில், கோட்டாறில் உள்ள ஆயுர்வேத மருத்துவக் கல்லூரியில் 60 இடங்கள் என 6 அரசு கல்லூரிகளில் மொத்தம் 390 இடங்கள் உள்ளன. இதேபோல 27 தனியார் கல்லூரிகளில் மாநில அரசு ஒதுக்கீட்டுக்கு சுமார் 1,200 இடங்கள் உள்ளன.
எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட அலோபதி மருத்துவப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நீட் தேர்வு மூலம் நடைபெற்று வருகிறது. இந்க நிலையில் சித்தா, ஹோமியோபதி, யுனானி, ஆயுர்வேதம் உள்ளிட்ட பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கும் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயம் என மத்திய அரசு அறிவித்தது.
இருப்பினும், அதிலிருந்து தமிழகத்துக்கு விலக்கு அளிக்கக் கோரி மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருப்பதாக சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறியிருந்தார். இந்த நிலையில், நிகழாண்டில் நீட் தரவரிசை அடிப்படையிலேயே அப் படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
மத்திய அரசு தமிழகத்தின் கோரிக்கையை ஏற்காததே அதற்குக் காரணம் என்று சுகாதாரத் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. நாட்டில் உள்ள பிற மாநிலங்களைப் போலவே தமிழகத்திலும் பாரம்பரிய மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வை நடத்த வேண்டும் என்று மத்திய அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U