👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
ஏடிஎம் கார்டுகளைக் கொண்டு மோசடி செய்வதைக் கட்டுப்படுத்தும் வகையில் ஏடிஎம்மில் இரண்டாவது முறை பணமெடுக்க 6 - 12 மணி நேரம் இடைவெளி நிர்ணயிக்க வங்கிகள் பரிசீலனை செய்துள்ளன.
புது தில்லியில் வங்கிக் கூட்டமைப்புகள் சார்பில் நடைபெற்ற ஆலோசனைக் கூட்டத்தில் ஏடிஎம் மோசடிகளைக் குறைக்க இந்த விதிமுறையை வங்கிகள் பரிசீலனை செய்துள்ளன.
பெரும்பாலான ஏடிஎம் மோசடிகள் நள்ளிரவில்தான் நிகழ்கின்றன. அதுபோன்ற சமயங்களில், முதல் முறை பணம் எடுப்பதற்கும், இரண்டாவது முறை பணம் எடுப்பதற்கும் இடையே 6 - 12 மணி நேரம் இடைவெளி விதிக்கப்பட்டால் மோசடிகள் குறையும் என்று ஓரியண்டல் வர்த்தக வங்கியின் மூத்த செயல் அதிகாரி கூறியுள்ளார்.
சுமார் 18 வங்கிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டத்தில் இந்த திட்டம் ஆலோசிக்கப்பட்டதாகவும், ஒரு வேளை இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், வாடிக்கையாளர்கள் ஒரே நேரத்தில் ஒன்றுக்கும் மேற்பட்ட முறை ஏடிஎம்களைப் பயன்படுத்தி பணம் எடுக்க முடியாமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது.
இதுபோன்று பல்வேறு திட்டங்களையும் வங்கிகள் தரப்பில் முன் வைக்கப்பட்டது. அதில், ஏடிஎம்மில் பணமெடுக்கும் போது, பணப்பரிமாற்றம் செய்யும் போது நடைமுறையில் இருப்பது போன்று செல்போனில் ஒன் டைம் பாஸ்வேர்ட் அனுப்பி பதிவு செய்வது என்ற விதியும் பரிசீலிக்கப்பட்டது.
ஏடிஎம் மையங்களில் ஆடியோ மூலம் வாடிக்கையாளர்களைக் கட்டுப்படுத்தும் திட்டமும் பரிசீலிக்கப்பட்டது. அதாவது ஹெல்மெட்டுடன் யாராவது உள்ளே நுழைந்தால், ஆடியோ மூலம் ஹெல்மெட்டைக் கழற்றுமாறு அறிவிக்கலாம். இதனை செய்வதன் மூலம் வாடிக்கையாளர்கள் கண்காணிக்கப்படுகிறார்கள் என்ற பயம் திருடர்களுக்கு ஏற்படலாம்.
தற்போது இந்த முறை 300 ஏடிஎம்களில் நடைமுறையில் உள்ளது. அனைத்து சிசிடிவி கேமராக்களும் வங்கியின் தலைமை அலுவலகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அறையில் மேற்பார்வை செய்யப்படும். ஒருவேளை இந்த நடைமுறை அனைத்து ஏடிஎம்களுக்கும் செயல்படுத்தப்பட்டால், ஏடிஎம் காவலர்கள் தேவையில்லாமல் போகலாம் என்றும் கூறப்படுகிறது
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U