👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழகத்தில் காலியாகவுள்ள வருவாய் உதவியாளர் பணியிடங்களில் 91 இடங்கள் அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலமாக நிரப்பப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. 1,384 இடங்கள் பதவி உயர்வு போன்ற நடவடிக்கைகளால் நிரப்பப்பட இருப்பதாகவும் அரசு கூறியுள்ளது.
இதற்கான உத்தரவை அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கும் வருவாய் நிர்வாக இணை ஆணையாளர் எம்.லட்சுமி அண்மையில் அனுப்பியுள்ளார். அதன் விவரம்:-
தமிழகத்தின் அனைத்து மாவட்ட ஆட்சியர்களிடம் இருந்தும் காலியாகவுள்ள வருவாய் உதவியாளர் பணியிடங்கள் குறித்த தகவல்கள் கிடைக்கப் பெற்றன. இந்தத் தகவல்கள் அனைத்தும் இப்போது தொகுக்கப்பட்டு காலியாகவுள்ள பணியிடங்கள் மொத்தமாக கண்டறியப்பட்டுள்ளன. அதன்படி, மொத்தம் 91 காலிப் பணியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலமாக நிரப்பப்படும்.
இதற்காக தேர்வாணையத்தின் சார்பில் தேர்வுக்கான அறிவிக்கை வெளியிடப்பட்டு காலியிடங்களை பூர்த்தி செய்யும் நடவடிக்கைகள் தொடங்கப்படும்.
இதேபோன்று, 1,384 காலிப் பணியிடங்கள் பதவி உயர்வுகள் மூலமாக நிரப்பப்படும். இதற்காக ஒவ்வொரு மாவட்ட வாரியாக காலியிடங்களின் விவரங்கள் இணைப்பாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளன என்றும் இணை ஆணையாளர் லட்சுமி தெரிவித்துள்ளார்.
சென்னை-காஞ்சியில் அதிகம்: காஞ்சிபுரம் மாவட்டத்தில் மட்டும் 167 காலியிடங்கள் பதவி உயர்வு மூலமாக நிரப்பப்பட உள்ளன. சென்னையில் 109 காலியிடங்கள் பதவி உயர்வின் மூலமாகவும், 31 இடங்களில் எழுத்துத் தேர்வு வழியாகவும் நிரப்பப்பட உள்ளன.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U