தமிழக பள்ளிகளில், தொண்டு நிறுவனங்கள், தனியார் மூலமாக ரூ.102 கோடி அளவுக்கு நலத்திட்ட பணிகள் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Saturday, August 24, 2019

தமிழக பள்ளிகளில், தொண்டு நிறுவனங்கள், தனியார் மூலமாக ரூ.102 கோடி அளவுக்கு நலத்திட்ட பணிகள்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9361194452 To Ur Groups
தமிழக பள்ளிகளில், தொண்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் மூலமாக 102 கோடி ரூபாய் அளவுக்கு நலத்திட்ட பணிகள் நடைபெற்று உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் சட்டமன்ற தொகுதி, பொங்கலூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட கொடுவாய் அரசு மேல்நிலைப்பள்ளியில் 100 சதவீத தனியார் பங்களிப்புடன் நடைபெற்று வரும் பள்ளிக் கட்டிடப் பணிகளை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் ஆகியோர் பார்வையிட்டனர். அங்கு தொழிலதிபர்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுடன் பள்ளி கல்வி குறித்து கலந்துரையாடிய அமைச்சர் செங்கோட்டையன், அரசு பள்ளிகளுக்கு யார் வேண்டுமானாலும் உதவி செய்யலாம் என்றார். சிறு சிறு பணிகளை கூட தனியார் பொறுப்பெடுத்து செய்யலாம் என்றார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளிக்கல்வித்துறைக்கு 28,957 கோடியே 62 லட்ச ரூபாயை ஒதுக்கி முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சாதனை புரிந்துள்ளார் என்றார். மாணவர்களுக்கு 15,42,000 மடிக்கணிணிகள் வழங்க அரசு ஆணை பிறப்பித்துள்ளதாக அவர் கூறினார்.
அரசு பள்ளிகளின் கட்டிடங்கள், கழிவறைகளை சீரமைக்க உரிய நடவடிக்கை எடுத்து வருவதாக அவர் கூறினார். அரசு மட்டுமின்றி தனியாரும் பள்ளி கட்டிட சீரமைப்புக்கு கை கொடுத்துள்ளதாக அவர் குறிப்பிட்டார். ஆசிரியர் தகுதி தேர்வில் குறைவானவர்களே தேர்ச்சி பெற்றுள்ளது குறித்த கேள்விக்கு பதில் அளித்த அவர், அந்த தேர்வுக்கான கேள்வி தாள்களை அண்ணாபல்கலை கழகம் தயாரித்து கொடுத்தது என்றார். அந்த கேள்வித்தாள் புதிய பாடத்திட்டத்தின் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது என்ற அவர், தேர்வு எழுதியவர்களின் பலர், பல ஆண்டுகளுக்கு முன்பு படித்தவர்கள் என்றார். இதனால் கேள்வித்தாள் கடினமாக இருந்திருக்கும் என்ற அவர், சிறந்த தகுதி வாய்ந்தவர்கள் ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றுள்ளதாகவும், காலி பணியிடங்களுக்கு தேவையான அளவுக்கு தேர்ச்சி பெற்றவர்களின் எண்ணிக்கை உள்ளதாக செங்கோட்டையன் தெரிவித்தார். பேட்டியின் போது அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன், தனியரசு எம்.எல்ஏ உள்ளிட்ட பலர் உடன் இருந்தனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews