👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தமிழக அரசுப்பள்ளிகளில் 10 ஆயிரம் உபரி பட்டதாரி ஆசிரியர்களை, இடைநிலை ஆசிரியர்களாக பணி இறக்கம் செய்ய பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக முடிவு செய்துள்ளது.
இதுதொடர்பாக தமிழ்நாடு தொடக்க, நடுநிலைப்பள்ளி பட்டதாரி ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் பி.சேகர் கூறியதாவது:
‘உபரி ஆசிரியர் பணியிடங்கள் என்று இவர்கள் கணக்கு காட்டுவதே தவறு. கட்டாய கல்வி உரிமைச் சட்டப்படி 30 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற விகிதாச்சாரத்தில் இருக்க வேண்டும். ஆனால் தமிழக அரசு 65 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் என்ற நிலையை ஏற்படுத்த முயற்சிக்கிறது.
அதேபோல் அரசுப்பள்ளிகளில் ஆங்கிலம் மீடியம், தமிழ் மீடியம் என்று இருந்தால் 15 மாணவர்களுக்கு ஒரு ஆசிரியர் வீதம் 2 பட்டதாரி ஆசிரியர்கள் இருக்க வேண்டும். தவிர இடைநிலை ஆசிரியர்கள் குழந்தைகளுக்கான மனநல பயிற்சியை பெற்று வருகின்றனர்.
பட்டதாரி ஆசிரியர்கள் பி.எட் படிப்பில் வயது வந்தோருக்கான மனநலம் தொடர்பாக பயிற்சி பெற்று வருகின்றனர்.
இந்த விகிதாச்சாரத்தை கடைபிடிக்காமல் எப்படி தமிழகத்தின் கல்வித்தரம் உயரும். அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை அதிகரிக்க வேண்டும் என்றால் தரம் வாய்ந்த தனியார் பள்ளிகளில் கடைபிடிக்கப்படும் ஆசிரியர், மாணவர் விகிதாச்சாரத்தை கடைபிடிக்க வேண்டும்.
இதை தவிர்த்துவிட்டு வேண்டும் என்றே எங்களை பழிதீர்க்க வேண்டும் என்பதற்காக பட்டதாரி ஆசிரியர்களை இடைநிலை ஆசிரியர்களாக நிலை இறக்க முயற்சிப்பது என்ன நியாயம்?எனவே, அரசு உபரி ஆசிரியர்கள் என்ற பெயரில் பட்டியலை தயாரித்த உடனே நாங்கள் கடந்த 7ம் தேதி எங்கள் நிலையை விளக்க மாநில நிர்வாகிகள் மட்டும் எழிலகம் அருகில் உண்ணாவிரதம் மேற்கொண்டோம். அப்போது வரும் 16ம் தேதி (இன்று) முதல்வரை சந்திப்பது என்று தீர்மானித்தோம்.
இதையறிந்த அரசு, எங்களிடம் சட்டமன்றம் நடந்து கொண்டிருப்பதால் கூட்டத்தொடர் முடிந்த பிறகு சந்திக்கலாம் என்று தெரிவித்தது.
ஆனாலும், ஜாக்டோ ஜியோ மாநில ஒருங்கிணைப்புக்குழுவை சேர்ந்த 20 பேர் முதல்வரை செவ்வாய்கிழமை(இன்று) திட்டமிட்டபடி சந்திப்பது என்று முடிவு செய்துள்ளோம்’ என்றார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U