👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
மாநிலக் கல்லூரி முன் தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையின் நகலை எரித்து போராட்டம் நடத்த வந்த முன்னாள் மாணவனை கல்லூரி ஊழியர்கள் தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
மத்திய அரசு அமைத்த கஸ்தூரி ரங்கன் குழு தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையை சில மாதங்களுக்கு முன் தாக்கல் செய்தது. அதில் பள்ளி மாணவர்கள் மூன்று மொழிகளை படிப்பதை கட்டாயமாக்க வேண்டும் என்பது உள்பட நடைமுறைக்கு ஒவ்வாத பல விஷயங்கள் இடம்பெற்றுள்ளன. இந்த வரைவு அறிக்கை குறித்து பொதுமக்கள், கல்வியாளர்கள் கருத்து தெரிவிக்க ஜூலை 31ம் தேதி கடைசி நாளாக நிர்ணயிக்கப்பட்டது. இதற்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ளது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்கட்சிகள், கல்வியாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்நிலையில் மெரினா காமராஜர் சாலையிலுள்ள மாநிலக் கல்லூரி வளாகத்தில் புதிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையின் நகலை தீ வைத்து எரிக்கும் போராட்டம் நடத்தப்போவதாக மாணவர் அமைப்பினர் சார்பில் தகவல் வெளியிடப்பட்டது. இதையடுத்து அண்ணா சதுக்கம் போலீசார் மற்றும் கல்லூரி கல்லூரி ஊழியர்கள் கல்லூரியின் நுழைவாயிலில் நின்று கல்லூரிக்கு வரும் மாணவர்களை ஐடி கார்டை சோதித்த பின்னரே உள்ளே அனுமதித்தனர். அப்போது மாணவர் ஒருவர் தேசிய கல்விக்கொள்கையின் வரைவு அறிக்கையின் நகலுடன் கல்லூரி வளாகத்துக்குள் நுழைய முயன்றார். அப்போது அதை கவனித்த ஊழியர்கள், மாணவரை கல்லூரி வளாகத்துக்குள் செல்லவிடாமல் தடுத்தனர். அப்போது மாணவருக்கும் ஊழியர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அதில் ஊழியர்கள் மாணவனை தாக்கினர். இதனால் கல்லூரி வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இதுகுறித்து தகவல் அறிந்த மாநிலக் கல்லூரி முதல்வர் சம்பவ இடத்துக்கு வந்து, துண்டு பிரசுரத்துடன் வந்த மாணவனிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது துண்டு பிரசுரத்துடன் வந்தவர் முன்னாள் மாணவன் என்பது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து மாணவனை கல்லூரி ஊழியர்கள் போலீசாரிடம் ஒப்படைத்தனர். இந்த சம்பவத்தால் கல்லூரியில் அரை மணி நேரத்துக்கு மேல் பதட்டம் ஏற்பட்டது. பின்னர் போலீசார் காவல் நிலையத்துக்கு அழைத்து சென்று முன்னாள் மாணவனை கடுமையாக எச்சரித்து அனுப்பினர். மேலும் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறுவதை தடுக்க கல்லூரி நுழைவாயில் முன்பு 20க்கும் அதிகமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U