நீட் கோச்சிங் எனும் பணம் கொட்டும் பிஸ்னஸ்! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 24, 2019

நீட் கோச்சிங் எனும் பணம் கொட்டும் பிஸ்னஸ்!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
2016ஆம் ஆண்டு கோட்டாவில் உள்ள நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களில் படித்த மாணவர்கள் 1.25 லட்சம் பேர். இதில், நீட் தேர்வுக்காக சேர்ந்தவர்கள் மட்டும் 60,000 பேர். கிட்டத்தட்ட மொத்த எண்ணிக்கையில் பாதி. புதிய கல்விக் கொள்கை பற்றி விமர்சித்த நடிகர் சூர்யா நீட் தேர்வு மூலம் வருடம் தோறும் 5,000 கோடி ரூபாய் பிசினஸ் நடப்பதாக விமர்சித்தார். சூர்யாவின் இந்தக் கருத்தில் எந்த அளவுக்கு உண்மை இருக்கிறது? நீட் தேர்வுக்கு பயற்சி அளிக்கும் மையங்கள் எப்படி செயல்படுகின்றன?
நீட் தேர்வு மையங்கள் அதிகளவில் உள்ள மாநிலங்கள் உத்தரப்பிரதேசம், ஹரியானா, மத்தியப் பிரதேசம் மற்றும் ராஜஸ்தான் முதலானவை. ராஜஸ்தான் மாநிலத்தின் கோட்டா நகரத்தில் நுழைவுத் தேர்வு பயிற்சி மையங்களுக்கு பஞ்சமே இல்லை. 2016ஆம் ஆண்டு கோட்டாவில் உள்ள நுழைவுத்தேர்வுகளுக்கான பயிற்சி மையங்களில் படித்த மாணவர்கள் 1.25 லட்சம் பேர். இதில், நீட் தேர்வுக்காக சேர்ந்தவர்கள் மட்டும் 60,000 பேர். கிட்டத்தட்ட மொத்த எண்ணிக்கையில் பாதி. கோட்டாவில் உள்ள பயிற்சி மையங்களுக்கு வெளி மாநில மாணவர்கள் வந்து படிக்கும் அளவுக்கு மவுசு அதிகமாக உள்ளது. NEET, JEE, AIPMT, GATE, CLAT என பல நுழைவுத் தேர்வுகளை எதிர்கொள்ளும் மாணவர்கள் இங்கே குவிகிறார்கள். இதே கோட்டவில்தான் மாணவர்கள் தற்கொலை எண்ணிக்கையும் அதிகமாக உள்ளது. அவர்களில் பலர் பயிற்சியின்போது ஏற்படும் அதீத மன அழுத்தம் காரணமாக தற்கொலை செய்யும் எல்லை வரை செல்ல நேர்கிறது. பள்ளிகளில் ஒரு வகுப்பில் 30, 40 பேருடன் சேர்ந்து படித்த மாணவர்கள், கோட்டா பயிற்சி மையங்களில் ஒரே வகுப்பில் 200-300 பேரில் ஒருவராக உள்ளனர். இரண்டு, மூன்று வாரங்களுக்கு ஒரு மாதிரித் தேர்வு எழுதுகிறார்ற்ற. அதில் எடுக்கும் மதிப்பெண்கள் உடனே பெற்றோருக்கு அனுப்பப்படுகிறது.
மாதிரித் தேர்வில் மதிப்பெண் குறைந்தாலே பெற்றோரின் ஏச்சுக்கும் பேச்சுக்கும் ஆளாக வேண்டிய நெருக்கடியில் சிக்குகின்றனர். அதுமட்டுமின்றி பயிற்சி மையத்தில் மாதிரத் தேர்வில் மாணவர்கள் எடுக்கும் மதிப்பெண்களை வைத்து குழுவாக பிரிக்கப்படுகிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் மத்தியில் குறைவான மதிப்பெண் எடுத்து நன்றாக படிக்காதவர்கள் குழுவில் சேர்க்கப்பட்டால் அதுவும் மன அழுத்த்தில் தள்ளுகிறது. கோட்டாவில் மட்டுமே நூற்றுக்கு அதிகமான பயிற்சி மையங்கள் இயங்குகின்றன. ஆண்டுதோறும் ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்க வருகிறார்கள். ஆண்டுக்கு ரூ.1,500 கோடி மதிக்கத்தக்க மாபெரும் பிசினஸ் நடக்கிறது. வெறும் 12 லட்சம் மக்கள் வசிக்கும் கோட்டா போன்ற சிறு நகரத்தில்கூட ரூ.1,500 கோடி வர்த்தகம் என்றால் நாடு முழுக்க உள்ள பயிற்சி மையங்களின் மூலம் எவ்வளவு பெரிய சந்தை நடைபெற்றுக்கொண்டிருக்கும்? இந்த பயற்சி மையங்களுக்கு நெறிமுறைகளை விதித்து, கண்காணித்து, ஒழுங்கு நடவடிக்கை எடுக்க என்ன வழி இருக்கிறது? இத்தனை பெரிய சந்தை கல்வியை வைத்து உருவாகியிருப்பது வருந்தத்தக்கது. 2017ஆம் ஆண்டு கோட்டாவில் உள்ள பயிற்சி மையங்களில் வருமானவரித்துறை விரிவான சோதனை நடத்தி ரூ.100 கோடிக்கு மேற்பட்ட கணக்கில் வராத பணத்தை பறிமுதல் செய்தது. நீட் தேர்வு கட்டாயப்படுத்தப்படுவது நிலைத்துவிட்டால், தமிழ்நாட்டிலும் கோட்டாவைப் போன்ற கோச்சிங் பிசினஸ் களைகட்டும் ஆபத்தை எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews