சத்துணவு மையங்களில் ரூ. 5 கோடியில் காய்கறி தோட்டம் - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Friday, July 12, 2019

சத்துணவு மையங்களில் ரூ. 5 கோடியில் காய்கறி தோட்டம்

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
''அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு, இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம், மேலும், ஏழு மாவட்டங்களுக்கு விரிவுபடுத்தப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்* அங்கன்வாடி மைய குழந்தைகளுக்கு, இரண்டு ஜோடி இலவச வண்ண சீருடை வழங்கும் திட்டம், 10 மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு உள்ளது. இத்திட்டம், தர்மபுரி, நாமக்கல், ராமநாதபுரம், சேலம், திருவண்ணாமலை, திருவாரூர், விருதுநகர் மாவட்டங்களுக்கும், 6.51 கோடி ரூபாயில் விரிவுபடுத்தப்படும்.*நடப்பாண்டு, 1,133 அங்கன்வாடி மைய கட்டடங்களில், தலா, 2 லட்சம் ரூபாய் வீதம், 23 கோடி ரூபாய் செலவில், சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்படும். தலா, 3,000 ரூபாய் வீதம், 38 ஆயிரத்து, 489 மையங்களுக்கு, வருடாந்திர பராமரிப்பு நிதியாக, 11.55 கோடி ரூபாய் வழங்கப்படும்
அங்கன்வாடி மையங்களுக்கு வரும் தாய் மற்றும் குழந்தைகளுக்கு, மருத்துவப் பொருட்கள் அடங்கிய மருத்துவப் பெட்டி, கைத்துண்டு, சீப்பு, நகவெட்டி, சோப்பு அடங்கிய சுகாதாரப் பெட்டி, நடப்பாண்டில், 7.35 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும். 5,970 சத்துணவு மையங்களுக்கு, சமையல் உபகரணங்கள், 8.63 கோடி ரூபாய் செலவில் வழங்கப்படும்* சத்துணவு மையங்களில், தோட்டக்கலை துறை உதவியுடன், காய்கறி தோட்டம் அமைக்கப்படும். முதல் கட்டமாக, ஒரு சத்துணவு மையத்திற்கு, 5,000 ரூபாய் வீதம், 9,915 சத்துணவு மையங்களில், 5 கோடி ரூபாய் செலவில், காய்கறி தோட்டம் அமைக்கப்படும்* தஞ்சாவூர், திருச்சி, சேலம், கடலுார், கோவை, மதுரை மாவட்டங்களில் உள்ள, ஆறு அரசு சிறுவர் சீர்திருத்தப் பள்ளிகள், அவற்றுடன் தொடர்புடைய, 16 மாவட்டங்களில் உள்ள, இளைஞர் நீதிக் குழுமங்களுடன், 'வீடியோ கான்பரன்ஸ்' வசதியால் இணைக்கப்படும். இப்பணிகள், 'எல்காட்' நிறுவனம் வழியே, 2.60 கோடி ரூபாய் செலவில் மேற்கொள்ளப்படும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews