👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
'இரண்டு இடங்களில், புதிதாக, ஐ.டி.ஐ., என்ற, அரசு தொழில் பயிற்சி நிறுவனங்கள், 26 கோடி ரூபாய் செலவில் துவக்கப்படும்,'' என, முதல்வர், இ.பி.எஸ்., அறிவித்தார்.
சட்டசபையில், 110 விதியின் கீழ், முதல்வர் வெளியிட்ட அறிவிப்புகள்:
* காஞ்சிபுரம் மாவட்டம், பெரும்பாக்கம் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டம், செம்போடையில், புதிய தொழில் பயிற்சி நிறுவனங்கள், 26 கோடி ரூபாய் செலவில் துவக்கப்படும்
* அம்பத்துார், செங்கல்பட்டு, திருச்சி, கடலுார், பெரம்பலுார், கோவை, சேலம், திண்டுக்கல், மதுரை, விருதுநகர், துாத்துக்குடி அரசு தொழிற்பயிற்சி நிலையங்களில், நீண்ட கால மற்றும் குறுகிய கால, புதிய தொழில் பிரிவுகள், 44.19 கோடி ரூபாய் செலவில் துவக்கப்படும்
* அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில், பயிற்சி முடித்து செல்லும், 10 ஆயிரம் பேருக்கு, அவரவர் தொழில் பிரிவுக்கேற்ப, 7.50 கோடி ரூபாய் செலவில், கருவி தொகுப்புகள் வழங்கப்படும்
* சிவகங்கை, நாமக்கல், காரைக்குடி, திண்டுக்கல், துாத்துக்குடி, சேலம், மதுரை, தர்மபுரி, புதுக்கோட்டை, புள்ளம்பாடி, நாகலாபுரம், அம்பாசமுத்திரம் அரசு தொழில் பயிற்சி நிறுவனங்களில் பயிற்சி பெறுவோருக்கு, உணவுடன் கூடிய தங்கும் விடுதிகள், 64.41 லட்சம் ரூபாய் செலவில், புதிதாக ஏற்படுத்தப்படும்.இவ்வாறு, முதல்வர் அறிவித்தார்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U