'தீன் தயாள் ஸ்பார்ஷ்’ திட்டத்தின் கீழ் உதவித் தொகையைப் பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் அஞ்சல்துறை அறிவிப்பு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Wednesday, July 24, 2019

'தீன் தயாள் ஸ்பார்ஷ்’ திட்டத்தின் கீழ் உதவித் தொகையைப் பெற மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் அஞ்சல்துறை அறிவிப்பு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
தபால் தலை சேகரிப்பை ஊக்கப்படுத்தும் விதமாக தொடங்கப்பட்ட தீன்தயாள் ஸ்பார்ஷ் திட்டத்தின் கீழ், பள்ளி மாணவர்கள் உதவித்தொகை பெறுவதற்காக விண்ணப்பத்தை அந்தந்தப் பகுதியில் உள்ள அஞ்சலகங்களில் ஜூலை 26-ஆம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும் என்று தமிழக அஞ்சல் துறை தெரிவித்துள்ளது. தபால் தலை சேகரிக்கும் பள்ளி மாணவர்களை ஊக்கப்படுத்துவதற்காக தீன்தயாள் ஸ்பார்ஷ் (SPARSH -Scholarship for Promotion of Aptitude & Research in Stamps as a Hobby) என்ற உதவித்தொகை திட்டத்தை மத்திய அரசு கடந்த 2017-ஆம் ஆண்டு தொடங்கியது.
இந்தத் திட்டத்தின் கீழ், 6-ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களில் நன்றாகப் படிப்பதுடன், தபால்தலை சேகரிப்பை ஒரு பொழுதுபோக்காகக் கொண்ட மாணவர்களுக்கு ஆண்டுக்கு ரூ.6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படுகிறது.அந்த வகையில், நிகழாண்டில் இந்தத் திட்டத்தின் கீழ், உ தவித்தொகை வழங்குவதற்காக அனைத்து அஞ்சல் வட்டங்களிலும் போட்டித் தேர்வுகள் நடத்தப்படவுள்ளன. இந்த உதவித்தொகையை பெற விரும்பும் மாணவர்கள், நாட்டில் உள்ள அங்கீகரிக்கப்பட்ட பள்ளியில் படிப்பவராக இருக்க வேண்டும். அந்தப் பள்ளியில் இயங்கும் தபால் தலை சேகரிக்கும் மன்றத்தில் சம்பந்தப்பட்ட மாணவர் உறுப்பினராக இருக்க வேண்டும் . தபால் தலை சேகரிப்பு மன்றம் இல்லாத பள்ளியில் படிக்கும் மாணவராக இருந்தால், அவர் சொந்தமாக தபால் தலை சேமிப்பு கணக்கு வைத்திருக்க வேண்டும்
. போட்டியில் பங்கேற்கும் ஒவ்வொரு பள்ளியும், தபால் தலை சேகரிப்பு முன்னோடியாக அறிவிக்கப்பட்டு, பள்ளி அளவிலான தபால்தலை சேகரிப்பு மன்றத்தை உருவாக்க உதவி செய்ய வேண்டும் . இளம் மற்றும் தபால் தலை சேகரிப்பில் ஆர்வமுள்ள மாணவர்கள், அதனை எவ்வாறு ஒரு பொழுதுபோக்காகத் தொடர வேண்டும் என்பது குறித்தும், தபால் தலை சேகரிப்பு தொடர்பான திட்டங்களில் ஈடுபடவும் உதவியாக இருக்கும் . இந்த உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்பங்களை, அந்தந்தப் பகுதியில் உள்ள அஞ்சலகங்களில் வரும் 26-ஆம் தேதிக்கு முன்பாக சமர்ப்பிக்க வேண்டும். விண்ணப்பப் படிவங்களை www.tamilnadupost.nic.in என்ற இணையதளத்திலிருந்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews