👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
இப்போது தமிழை மட்டும் எடுத்து படிப்பவர்கள், அரசு போட்டித்தேர்வுகளில் அதிகம் வெற்றிபெறுகிறார்கள். ஆசிரியர் பணி, ஊடகத்துறை உட்பட, பல்வேறு துறைகளில் அவர்களுக்கு பணி வாய்ப்பு காத்திருக்கிறது.
கல்லூரி
மதுரை மாநகரின் மையத்தில், லாப நோக்கமில்லாமல் தமிழ் மொழியை அடுத்த தலைமுறைக்குக் கொண்டுசெல்லும் ஒரே லட்சியத்தில் தமிழ் இளங்கலை, முதுகலை, முனைவர் ஆய்வுப் படிப்புகளைக் கற்பித்துவருகிறது இந்தக் கல்லூரி. பொறியியல் கல்லூரிகளும் கலைக்கல்லூரிகளும் பெருகியுள்ள நிலையில், தமிழ் மொழிக்காக ஒரு கல்லூரி செயல்படுவது ஆச்சர்யமான விஷயம்.

மருத்துவம், சட்டம், தொழில்நுட்பம், அறிவியல், கலைக் கல்வியைப் பயில்வதுபோல் தமிழையும் தற்போதைய தலைமுறையினர் விரும்பிப் படிக்கிறார்கள். மதுரை தமிழ்ச்சங்கச் சாலையில், வரலாற்றின் அடையாளமாக பிரமாண்டமாக அமைந்திருக்கும் செந்தமிழ்க் கல்லூரிக்குச் சென்றோம். 1901-ம் ஆண்டில் தொடங்கிய நான்காம் தமிழ்ச்சங்கம் மூலம் உருவான இந்தக் கல்லூரிக்குப் பின்னால் உள்ள கதை உணர்வுபூர்வமானது. இந்தக் கல்லூரியின் செயலாளர் லெட்சுமி குமரன் சேதுபதியிடம் பேசினோம்...
``நாட்டில் எவ்வளவோ மன்னர்கள் இருந்தாலும் கலை, இலக்கியம், மொழி, பண்பாட்டு வளர்ச்சியின்மீது ஒருசிலர்தான் ஈடுபாடு காட்டியிருக்கிறார்கள். அவர்களில் முதன்மையானவர்கள், முகவையை ஆண்ட சேதுபதிகள். தமிழகத்தில் தமிழ் மொழிக்கு என்று சிலர் கல்லூரிகளைத் தொடங்கினாலும், அவற்றைத் தொடர முடியவில்லை. ஆனால், நான்காம் தமிழ்ச்சங்கத்தை சேதுபதி மன்னர் குடும்பத்தினர் சிறப்பாக நடத்தி, அதன் மூலம் `செந்தமிழ் கலாசாலை' என்ற பெயரில் புலவர் படிப்புகளை நடத்திவந்தனர். இந்நிலையில், 1957- ம் ஆண்டில் செந்தமிழ் ஓரியண்டல் கல்லூரி என்ற பெயரில் அரசு உதவி பெரும் கல்லூரியாக மாற்றினார்கள். இந்தக் கல்லூரியை எந்தப் பொருளாதார சிந்தனையும் இல்லாமல் தமிழுக்கு ஆற்றும் கடமையாக இன்று வரை நடத்திவருகிறோம்'' என்றார்.
_15255.JPG)
கல்லூரியின் துணை முதல்வர் சுபலெட்சுமி, ``புதுமுக படிப்பு, இளநிலைப் படிப்புகளோடு தொடங்கப்பட்ட கல்லூரியில் இன்று முதுகலை, இளநிலை ஆய்வு, முனைவர் பட்ட ஆய்வு ஆகியவற்றுடன் தமிழ் உயராய்வு மையம் என்ற உயர்நிலையைப் பெற்றுள்ளது. அதுபோல், தமிழாசிரியர் சான்றிதழ் பயிற்சி வகுப்பும் உள்ளது. தமிழ் மொழியின் தொன்மையை மட்டுமல்லாமல், தமிழக வரலாற்றின் தொன்மையையும் கற்கும் வகையில் ஓலைச்சுவடி, கல்வெட்டியல் சான்றிதழ் பயிற்சியும் சிறப்பாக கற்பிக்கப்படுகிறது. நவீன காலத்துக்கு ஏற்றாற்போல் கணினிப் பட்டய வகுப்பும் நடத்துகிறோம்.
இப்போது, தமிழை மட்டும் எடுத்துப் படிப்பவர்கள் அரசு போட்டித்தேர்வுகளில் அதிகம் வெற்றிபெறுகிறார்கள். ஆசிரியர் பணி, ஊடகத் துறை உட்பட, பல்வேறு துறைகளில் அவர்களுக்கு பணி வாய்ப்பு காத்திருக்கிறது. தற்போது 600 மாணவர்கள் பயின்றுவருகிறார்கள். கல்விக்கட்டணம் மிகக்குறைவு. உலகிலேயே தாய்மொழிக்காக அர்ப்பணிப்போடு இந்தக் கல்லூரி செயல்பட்டுவருகிறது. உலகத் தமிழ் மாநாடு நடத்தவும், தமிழை செம்மொழியாக அறிவிக்கவும் காரணமாக இருந்துள்ளது இந்தக் கல்லூரி. தமிழக அரசின் தமிழ்த்தாய் விருதை முதலில் பெற்றது. தேவநேயப்பாவானார், கார்மேகக் கோனார், வேங்கடசாமி நாட்டார், சங்குப் புலவர், தீபம் நா.பார்த்தசாரதி, முன்னாள் சபாநாயகர் காளிமுத்து ஆகியோர் இந்தக் கல்லூரியில் பயின்ற அறிஞர்கள். 1977-ம் ஆண்டு வரை இங்கு புலவர் பட்டம் பெற்றவர்களுக்கு அரசுப் பள்ளிகளில் தமிழாசிரியர் பணி வழங்கப்பட்டுவந்தது. இங்கு பயின்ற எண்ணற்றோர் பல்கலைக்கழகம், கல்லூரி மற்றும் பள்ளிகளில் தமிழாசிரியர்களாக இப்போது பணியாற்றிவருகிறார்கள்'' என்றார்
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U