மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை குறித்து, பள்ளி, கல்லுாரி மாணவ, - மாணவியருக்கு, தனியார் தொண்டு நிறுவனம் சார்பில், கட்டுரைப் போட்டி அறிவிக்கப்பட்டு உள்ளது.
'பள்ளிகளில், மும்மொழிக் கொள்கையை அமல்படுத்த வேண்டும்' என்ற மத்திய அரசின் திட்ட அறிக்கை, தமிழகத்தில், சர்ச்சைக்குரிய விஷயமாக மாற்றப்பட்டுள்ளது.'நந்தினி வாய்ஸ் பார் தி டிப்ரைவ்டு' என்ற சென்னையைச் சேர்ந்த தன்னார்வ தொண்டு நிறுவனம், 'தமிழ்நாட்டில் பள்ளிகளில், மும்மொழிக் கொள்கைக்கு எதிர்ப்பு சரியானதா' என்ற தலைப்பில், பள்ளி, கல்லுாரி மாணவர்களுக்கு, கட்டுரைப் போட்டி நடத்துகிறது.
தமிழகத்தில் படித்து வரும் அனைத்து பள்ளி, கல்லுாரி மாணவ - மாணவியர் பங்கேற்கலாம். கட்டுரை, ஆங்கிலம் அல்லது தமிழில், 1,500 வார்த்தைகளுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சிறந்த ஐந்து கட்டுரைகளுக்கு பரிசு அளிக்கப்படும்.
முகவரி விபரம்:என்.எஸ்.வெங்கட்ராமன்,நிறுவனர்,நந்தினி வாய்ஸ் பார் தி டிப்ரைவ்டு'எம்: 60/1. 4வது குறுக்கு தெரு, பெசன்ட் நகர், சென்னை - 600090தொலைபேசி எண்: 044-24916037. இணையதளம்:
www.nandinivoice.com இமெயில்:
nsvenkatchennai@gmail.com ஜூலை, 15க்குள், கட்டுரைகளை, தபால் அல்லது இமெயில் மூலம் அனுப்பலாம்.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U