"போலீஸ் அதிகாரியாக வேண்டும்" - மகன் கனவு : கல்வி கட்டணம் செலுத்த முடியாத வேதனையில் குடும்பமே தற்கொலை - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Thursday, June 13, 2019

"போலீஸ் அதிகாரியாக வேண்டும்" - மகன் கனவு : கல்வி கட்டணம் செலுத்த முடியாத வேதனையில் குடும்பமே தற்கொலை

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
நாகப்பட்டினத்தில் பள்ளி திறந்து 10 நாட்கள் ஆகியும் கல்வி கட்டணத்தை செலுத்த முடியாததால் மகனை கொன்று தாய், தந்தை தற்கொலை செய்து கொண்டது கல்நெஞ்சையும் கறைய வைத்துள்ளது. வெளிபாளையத்தை சேர்ந்த செந்தில்குமார், லட்சுமி தம்பதி தன்னுடைய 11 வயது மகன் ஜெகதீஸ்வரனை கொலை செய்துவிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கின்றனர். தனியார் பள்ளியில் 6ம் வகுப்பு படித்துவந்த ஜெகதீஸ்வரனுக்கு கல்வி கட்டணத்தை செலுத்த முடியாமல் அவனது பெற்றோர் அவதிப்பட்டு வந்தனர்.
மேலும் யாரும் கடன் தர முன்வரவில்லை என்று தெரிகிறது. இதையடுத்து ஒரே மகனுக்கு பள்ளி திறந்து 10 நாட்கள் ஆகியும் கல்வி கட்டணத்தை செலுத்த முடியவில்லையே என்ற வருத்தத்தில் இருந்த பெற்றோர் ஜெகதீஸ்வரனை சாப்பாட்டில் விஷம் வைத்து கொன்றுள்ளனர். மேலும் போலீஸ் ஆக வேண்டும் என்று சிறுவன் கனவு கண்டதால் அவனுக்கு போலீஸ் உடையை அணிவித்து அதன் பின்னர் விஷத்தை கொடுத்துள்ளனர். பின்னர் அவர்கள் இருவரும் அதே உணவை சாப்பிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இதையடுத்து வறுமையால் 3 பேர் இறந்தது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews