ஜேஇஇ மதிப்பெண்களுக்கு இத்தனை இடங்களில் மதிப்பு இருக்கு! - kaninikkalvi - No 1 Educational Website in Tamil Nadu

Search This Blog

Sunday, June 16, 2019

ஜேஇஇ மதிப்பெண்களுக்கு இத்தனை இடங்களில் மதிப்பு இருக்கு!

👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here 👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups
ஐஐடி சேர்வதற்கே இத்தேர்வு நடத்தப்படுவதாக பரவலாக கருதப்படுகிறது. ஆனால், ஐஐடி மட்டுமின்றி பல்வேறு முக்கிய கல்வி நிறுவனங்கள் இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களைச் சேர்க்கின்றன. மத்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனங்களில் இளநிலை பொறியியல் தொழில்நுட்பப் படிப்புகளில் சேர ஜே.இ.இ. நுழைவுத் தேர்வு நடத்தப்படுகிறது. இது ஜே.இ.இ. மெயின் தேர்வு, ஜே.இ.இ. அட்வான்ஸ் தேர்வு என இரண்டு கட்டங்களாக நடத்தப்படும். ஜேஇஇ மெயின் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கான ஜேஇஇ அட்வான்ஸ் தேர்வு கடந்த மே மாதம் 27ஆம் தேதி நடைபெற்றது. இதன் தேர்வு முடிவுகள் www.jeeadv.ac.in என்ற அதிகாரபூர்வ இணையதளத்தில் வெள்ளிக்கிழமை வெளியாகியுள்ளன. ஐஐடி சேர்வதற்கே இத்தேர்வு நடத்தப்படுவதாக பரவலாக கருதப்படுகிறது. ஆனால், ஐஐடி மட்டுமின்றி பல்வேறு முக்கிய கல்வி நிறுவனங்கள் இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்களை அடிப்படையாகக் கொண்டு மாணவர்களைச் சேர்க்கின்றன. ஒவ்வொரு கல்வி நிறுவனமும் மாணவர் சேர்க்கைக்கு குறிப்பிட்ட மதிப்பெண்களை கட்-ஆப் மதிப்பெண்ணாக வைக்கும். இதன்படி ஜேஇஇ தேர்வில் கிடைத்த நல்ல மதிப்பெண்கள் எங்கெல்லாம் கருத்தில் கொள்ளப்படுகின்றன எனப் பாருங்கள்.
1. பெங்களூரில் உள்ள இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் (Indian Institute of Science) 2. இந்திய அறிவியல் கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம் (Indian Institutes of Science Education and Research). இது பெர்ஹாம்பூர், போபால், கொல்கத்தா, மொகாலி, புனே, திருவனந்தபுரம், திருப்பதி ஆகிய இடங்களில் உள்ளது. 3. திருவனந்தபுரத்தில் உள்ள இந்திய வான் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (Indian Institute of Space Science and Technology) 4. ரே பரேலியில் உள்ள ராஜிவ் ஆகந்தி பெட்ரோலிய தொழில்நுட்ப நிறுவனம் (Rajiv Gandhi Institute of Petroleum Technology) 5. விசாகப்பட்டினத்தில் உள்ள இந்திய பெட்ரோலியம் மற்றும் ஆற்றல் நிறுவனம் (Indian Institute of Petroleum & Energy)
👍Join Our📱Facebook🌍Page👉Click Here Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U

Total Pageviews