👍Join Our📱WhatsApp🌍Group👉Click Here
👍Join Our📱Telegram🌍Group👉Click Here👍Join Our📱Facebook🌍Page👉Click Here👍Join Our📱Twitter🌍Page👉Click HereAdd 9123576459 To Ur Groups

சென்னையில் பஸ் டே கொண்டாடிய புது கல்லூரி மாணவர்கள் 9 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி முதல்வர் நடவடிக்கை எடுத்துள்ளார். கோடை விடுமுறைக்கு பின்னர் சென்னையில் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் கடந்த 17ம் தேதி திறக்கப்பட்டன. கல்லூரிகள் திறப்பின்போது ஏதாவது அசம்பாவித சம்பவங்கள் நடைபெறுவது வழக்கம் என்பதால் அதை தடுப்பதற்காக முக்கிய கல்லூரி வாயில்களில் போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது. அரசு பஸ் வழித்தடங்கள், கல்லூரி பகுதிகளில் உள்ள பஸ் நிறுத்தங்களில் போலீசார் கண்காணிப்பில் ஈடுபட்டனர். எனினும் கல்லூரி மாணவர்கள் அரசு பஸ்களில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் அட்டகாசம் செய்தனர்.
கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாட ஏற்கனவே உயர்நீதிமன்றம் தடையும் விதித்துள்ளது. மேலும் பஸ்களின் மேற்கூரைகளில் ஏறவோ, பஸ்களில் பயணிகளுக்கு இடையூறு செய்யவோ கூடாது என போலீசாரும் எச்சரித்திருந்தனர். ஆனால், சென்னை பச்சையப்பன் கல்லூரி மாணவர்கள் பஸ் டே கொண்டாடுவதாக கூறி அரசு பேருந்து மேற்கூரையின் மீது ஏறி பாடியும் நடனம் ஆடியும் பொதுமக்களுக்கு இடையூறு அளித்தனர். இதையடுத்து, அக்கல்லூரி மாணவர்கள் 9 பேரை சஸ்பெண்ட் செய்து கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்தது. இந்த நிலையில் கடந்த 22ம் தேதியன்று பூந்தமல்லியிலிருந்து அண்ணா சாலை செல்லும் 25 ஜி பேருந்தில் பயணிகள், நடத்துனருக்கு இடையூறு ஏற்படுத்தியதாக புது கல்லூரி மாணவர்கள் மீது புகார் அளிக்கப்பட்டது.
உடனடியாக அங்கு சென்ற அண்ணா சாலை போலீசார், விசாரணை நடத்தி 9 மாணவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். வழக்குப்பதிவு செய்யப்பட்டது தொடர்பான விவரங்களை புது கல்லூரி நிர்வாகத்திற்கு அண்ணா சாலை காவல் துறையினர் அனுப்பி வைத்தனர். இதனை அடுத்து, இடையூறு அளித்த மாணவர்கள் மீது அக்கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த நடவடிக்கையின் படி 9 மாணவர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். மாணவர்கள் மீது எடுக்கப்பட்டுள்ள ஒழுங்கு நடவடிக்கை குறித்து புது கல்லூரி முதல்வர் ஏ.அப்துல் ஜப்பார், அண்ணா சாலை காவல்துறைக்கு கடிதம் ஒன்றையும் அனுப்பியுள்ளார். இதற்கிடையில் தீவிர விசாரணைக்கு பிறகு மாணவர்கள் மீது மேலும் நடவடிக்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
👍Join Our📱Facebook🌍Page👉Click Here
Press Ur Reaction Below& Share Ur Whatsapp Groups - Thank U